மகளுக்கு ஒரு லவ் லெட்டர் கூட வரலை... நீயா நானாவில் தாய் வேதனை! கோபிநாத்தின் தரமான பதில்
நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வார தலைப்பில் லவ் பண்ண சொல்லும் பெற்றோர்கள் மற்றும் காதல் அமையாத பிள்ளைகள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு லவ் பண்ண சொல்லும் பெற்றோர்கள் மற்றும் காதல் அமையாத பிள்ளைகள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது.
தாய் ஒருவர் தனது மகளுக்கு 23 வயதாகியும் ஒரு லவ் லெட்டர் கூட வரவில்லை என்று கூறி கவலைப்பட்டுள்ளார். அதற்கு அந்த பெண்ணும் செட் ஆகவில்லை என்று பதிலளிக்கின்றார்.
மற்றொரு அம்மாவும் மகனுக்கு காதல் அமையவில்லை என்று கூற உடனே கோபிநாத், சின்ன பையன் நிச்சயம் இந்த நேரத்துல ஒரு பொண்ணை லவ் பண்ணிட்டு இருப்பான் என்று கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |