என்னால முடியலை! நீயா நானாவிலிருந்து வெளியேறிய கோபிநாத்! அதிர்ந்து போன பார்வையாளர்கள்
நீயா நானா நிகழ்ச்சியிலிருந்து இடையில் விலக போவதாக நிகழ்ச்சியில் கோபிநாத் கூறிய காட்சி சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்படுகிறது.
கோபிநாத்தின் நீயா நானா நிகழ்ச்சி
பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங் முதலில் ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் 'நீயா நானா' . இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பல உண்மையான விடயங்கள் மற்றும் மக்கள் சமுகத்திற்கு தேவையான விடயங்கள் பேசப்படுவதால் கோபிநாத் ஷோ என்றாலே அனைவருக்கும் பிடித்தமான நிகழ்ச்சியாக பார்க்கப்படுகிறது.
மேலும் இரண்டு தரப்புகள் இருப்பார்கள் அவர் அவர் பக்கங்களில் உள்ள சரியான கூற்றை கூறுவார்கள். அதில் எது சமுக பார்வைக்கு ஏற்றதோ அதனை கோபிநாத் குறிப்பாக எடுத்து பேசுவார்.
இது மட்டுமல்ல கோபிநாத் நிகழ்ச்சி தொகுப்பாளர் மட்டுமல்ல ஒரு வானொலி கலைஞர், பேச்சாளர், விவாதிப்பவர், சிறந்த மனிதர் என பல திறமைகள் இவரினுள் இருக்கிறது. இதனாலே இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம்.
நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக அறிவிப்பு
இந்த நிலையில் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட போட்டியாளர்களில் ஒரு பக்கம் மனைவிமார்கள் அமர்ந்திருக்கிறார்கள். இன்னொரு பக்கம் கணவர்மார்கள் அமர்ந்திருக்கிறாரகள்.
அதில் வீட்டில் எடுக்கும் முக்கியமான முடிவுகள் எல்லாம் மனைவிமார்களின் அம்மாக்கள் தான் எடுக்கிறார்கள் என கணவர்கள் பக்கம் விவாதிக்கப்படுகிறது. ஏனென்றால் அவர்களுக்கு கணவர்மார்களை விட அம்மாக்கள் தான் முக்கியம் என மனைவிமார்கள் கூறியுள்ளார்கள்.
இவ்வாறு வாதம் முற்றும் போது கோபிநாத் அவர்கள் நிகழ்ச்சியை விட்டு பாதியில் வெளியில் செல்ல போவதாக கூறி விளையாட்டாக சென்றுள்ளார். இதனை தொடர்ந்து கணவர் எப்படியான ஆடைகளை அணிய வேண்டும் என்பதனை கூட அம்மாக்கள் தான் முடிவு செய்வார்களாம்.
அந்த வகையில் நிகழ்ச்சிக்கான ப்ரோமோ அடிக்கடி வெளியாகி வருகிறது.