கணவர் பணத்தை அம்மா வீட்டிற்கு கொடுக்கலாமா? நீயா நானாவில் கொந்தளித்த பெண்! அதிர்ச்சியடைந்த கோபிநாத்
நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வார தலைப்பில் கணவர் பணம் என் பணம் மற்றும் பெண்களுக்கென்று தனியாக பொருளாதா சுதந்திரம் வேண்டும் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு கணவர் பணம் என் பணம் மற்றும் பெண்களுக்கென்று தனியாக பொருளாதா சுதந்திரம் வேண்டும் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது.
இதில் கலந்து கொண்ட பெண்களில் ஒரு தரப்பினர், கணவர் பணம் தனது பணம் என்று கூறி வாக்குவாதம் வைக்கின்றனர். ஆனால் மற்றொரு தரப்பினர் கணவரிடம் கடன் வாங்கினால் அதை அடுத்த மாதமே திருப்பி கொடுத்துவிடுவேன் என்று கூறியுள்ளார்.
கணவர் 100 ரூபாய் கொடுத்துவிட்டு 100 தடவை கணக்கு கேட்பார் என்று பெண் ஒருவர் கொந்தளித்த நிலையில், மற்றொரு தரப்பில் இருந்த பெண் கணக்கு கேட்பதில் என்ன தவறு? நாம் சொல்வதிலும் என்ன கஷ்டம்? என்று கூறியுள்ளனர்.
ஆனால் இவர்கள் இரு தரப்பில் பேசுவதைக் கேட்ட கோபிநாத் எந்தவொரு பதில் அளிக்க முடியாமல் கேட்டுக் கொண்டிருக்கின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |