அரங்கத்தில் புடவை கட்டி நின்றால்...! கேவலமாக இருப்பதாக கூறிய பெண்: கோபிநாத்தின் பதில் என்ன?
நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வார தலைப்பில் நிகழ்ச்சியின் தொகுப்பாளரையே பெண்கள் சேலை கட்ட வைத்த சுவாரசிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் சில காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு சேலை விற்பனை செய்பவர்கள் மற்றும் பெண்கள் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
இதில் பெண் ஒருவர் கோபிநாத்தைப் பார்த்து, நீங்கள் சேலை கட்டினால் எப்படியிருக்கும்? என்று கேள்வி கேட்டு... சிறிது நேரத்தில் கேவலமாக இருக்கின்றது.. என்ற பதிலையும் கொடுத்து கோபிநாத்தை கடுப்பேற்றியுள்ளார்.
மற்றொரு ப்ரொமோ காட்சியில் கோபிநாத் புடவை கட்டிக்கொண்டு சிக்கித் தவிக்கும் காட்சி அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது.