அரங்கத்தில் கோபிநாத்தையே கடுப்பில் ஆழ்த்திய இளைஞர்! நீயா நானாவில் நடந்தது என்ன?
நீயா நானா நிகழ்ச்சியில் சினிமா நடிகர்களின் ரசிகர்கள் மற்றும் ரசிகர்கள் மேல் கோபம் கொள்ளும் நபர்கள் என்ற தலைப்பில் இந்த வாரம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் சில காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு சினிமா நடிகர்களின் ரசிகர்கள் மற்றும் ரசிகர்கள் மேல் கோபம் கொள்ளும் நபர்கள் என்பதில் விவாதிக்கப்பட்டது.
இதில் ரசிகர்களிடம் கோபிநாத் கேட்ட கேள்விக்கு அவர் கூறியுள்ள பதில், அவரை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது அவர் படத்தில் நடிகரின் எண்ட்ரியை பிரசவத்தினை சம்பந்தப்படுத்தி பேசியுள்ளார்.