Neeya Naana: பெண்கள் ஏன் அதிகம் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர்? கோபிநாத் கேள்விக்கு கிடைத்த பதில்
நீயா நானா நிகழ்ச்சியில் தங்கத்தில் தான் முதலீடு செய்வோம் என சொல்பவர்கள் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யமாட்டேன் என சொல்பவர்கள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் நீயா நானா நிகழ்ச்சியில் வாராவாரம் ஒரு தலைப்பைக் கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகின்றார்.
இந்த வாரம் தங்கத்தில் தான் முதலீடு செய்வோம் என சொல்பவர்கள் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யமாட்டேன் என சொல்பவர்கள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.

இன்றைய காலத்தில் தங்கத்தின் விலை நாளுக்குநாள் அதிகரித்துவரும் நிலையில், தங்கத்தில் முதலீடு செய்வதில் பெண்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஒரு சிலர் இதன் செய்கூலி மற்றும் சேதாரம் இவற்றினைப் பார்த்து தங்கத்தில் முதலீடு செய்யாமல், அஞ்சல்துறையில் பணத்தினை சேமித்து வருகின்றனர்.
இங்கு நகை இருந்தால் தான் மதிப்பார்கள் என்று நினைப்பவர்கள் 50 சதவீதம் நகையினை வாங்குகின்றனர். சிலர் முதலீடு என்ற பெயரில் வாங்குபவர்களும் 50 சதவீதம் உள்ளதாக நீயா நானாவில் கூறப்படுகின்றது.
மேலும் பிரபல நகைக்கடையைச் சேர்ந்த உரிமையாளர் ஒருவரும் இதற்கான விளக்கத்தினை கூறியுள்ளார். தங்கத்தில் பணம் போடுவதில் தவறு கிடையாது என்பது தற்போது மிகவும் தெளிவாகவே புரிந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |