Bigg Boss: கண்ணீருடன் சிறிய இடைவேளை... மாஸ் காட்டிய விஜய் சேதுபதி
பிக் பாஸ் வீட்டில் வியானா இந்த வாரம் நடந்து கொண்ட விதத்தினை விஜய் சேதுபதி தனது பாணியில் கேள்வி விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
பிக் பாஸ்
பிரபல ரவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் மாதம் 5ம் தேதி ஆரம்பமாகியது. 24 போட்டியாளர்கள் உள்ளே இருந்த நிலையில் தற்போது 15 போட்டியாளர்கள் இருக்கின்றனர்.
கடந்த வாரம் விஜய் சேதுபதி எலிமினேஷன் எதுவும் இல்லை என்று எவிக்ஷன் கார்டை கிழித்துப் போட்டு போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

இந்த வாரத்தில் பிக்பாஸ் வீட்டின் தலைவராக ரம்யா இருந்து வருகின்றார். இந்த வாரத்திற்கான டாஸ்கில் போட்டியாளர்கள் நடந்து கொண்ட விதத்தினைக் குறித்து விஜய் சேதுபதி பேசியுள்ளார்.
முதல் ப்ரொமோ காட்சியில் பதற்றமாக இருக்குற புலவர் கதாபாத்திரம் நாம் ஒருவருக்கு மட்டுமே கொடுத்தோம். கிருமி.. ஆனால் அந்த கிருமி எல்லாரையும் கடித்ததா என்று தெரியவில்லை. எல்லாரும் பதற்றமாகவே இருந்தாங்க... இவங்க பதற்றத்தினை பக்கெட்டில் நிரப்ப வைத்து என்னவென்று கேட்போம் என்று கூறியுள்ளார்.
இரண்டாவது ப்ரொமோ காட்சியில் பக்கெட் விஷயத்தினை மீண்டும் விஜய் சேதுபதி பேசியு்ளளார். இதில் வியானா செய்த தவறை சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் வியானா கண்கலங்கி அழுதுள்ளார். இதனை அவதானித்த விஜய் சேதுபதியும் கண்ணீருடன் சிறிய இடைவேளைக்கு பின்பு என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |