இவங்களை இம்ப்ரஸ் பண்றதுக்கு பண்ணுனன்! நீயா நானாவில் உடைந்த உண்மை: விழுந்து விழுந்து சிரித்த கோபிநாத்
நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வார தலைப்பில் வார இறுதி கொண்டாட்டத்திற்கு தயாராகும் மனைவிகள் மற்றும் அதற்கு நோ சொல்லும் கணவர் என்ற தலைப்பில் விவாதங்கள் தொடர்ந்துள்ளது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் சில காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு வார இறுதி கொண்டாட்டத்திற்கு தயாராகும் மனைவிகள் மற்றும் அதற்கு நோ சொல்லும் கணவர் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் இருக்கும் மனைவிகள் கணவருடன் வெளியே செல்ல வேண்டும் என்று நினைப்பது இயல்பான ஒன்றே. ஆனால் அதனை திருமணத்திற்கு முன்பு செய்யும் ஆண்கள் திருமணத்திற்கு பின்பு செய்ய தயங்குகின்றனர்.
இதற்கு காரணத்தையும் நீயா நானாவில் பல கணவர்கள் கோபிநாத் முன்பு உடைத்துள்ளனர். அதில் ஒருவர் திருமணத்திற்கு முன்பு பெண்ணை இம்ப்ரஸ் செய்வதற்கு அவ்வாறு செய்தேன் என்றும் தற்போது அப்படி இல்லையே ஒன்று ஓபனாக பேசியுள்ளார்.