கிளம்பி போடா சோம்பேறி! 2K கிட்ஸின் அலப்பறை தாங்க முடியாமல் ஒதுங்கி போன கோபிநாத்
நீயா நானாவில் இந்த வாரம் 90 ஸ் கிட்ஸ், 2 கே கிட்ஸ் கிழித்து தொங்க விட்டுள்ளார்கள்.
நீயா நானாவில் சிறப்பு போட்டி
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் நீயா நானா.
இந்த நிகழ்ச்சியில் மக்களுக்கு தேவையான ஏதாவொரு தலைப்பு எடுக்கப்பட்டு அது இரண்டு குழுக்களாக பிரிக்கபட்டு மிகவும் கலக்கலான முறையில் விவாதிக்கப்படும்.
பின்னர் சமூகத்திற்கு தேவையான அனைத்து விடயங்களும் இங்கு கலந்துரையாடப்பட்டு அதற்கான தீர்வுகளும் அந்த நிகழ்ச்சியில் இறுதியில் வழங்கப்படும்.
தொடர்ந்து இந்த ஷோவை தமிழகம் மட்டுமல்ல பலர் கோடி மக்கள் பார்வையிட்டு வருகிறார்கள்.
மேலும் கோபிநாத் பல உண்மை சம்பவங்களுக்கு சார்பாக இருப்பதால் இவருக்கு என ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்து வருகிறார்கள்.
90 ஸ் கிட்ஸின் அனுபவங்கள்
இந்த நிலையில், நீயா நானாவில் இந்த வாரம் 90 ஸ் கிட்ஸின் அனுபவங்கள் தொடர்பான கருத்துக்கள் மற்றும் அவர்கள் அந்த காலத்தில் செய்த விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
அதில், “ நாங்க அந்த காலத்தில் பஞ்சு மிட்டாய் சாப்பிடும் போது என்ன செய்வோம் தெரியுமா? என 90ஸ் கிட்ஸ் படுத்தும் தொல்லை தாங்க முடியவில்லை” என 20 கே கிட்ஸை சார்ந்த பெண்ணொருவர் எனக் கூறியுள்ளார்.
மேலும் 90 ஸ் கிட்ஸ் செய்யும் அந்த காலத்து அலப்பறைகள் வரவர பொருத்து கொண்டு இருக்க முடியவில்லை எனவும் 2 கே கிட்ஸ் குழுவினர் குற்றம் சுமத்தியுள்ளார்கள்.
இந்த வாதத்தினை பார்த்து கோபிநாத் வயிறு குலுங்க குலுங்க சிரித்துள்ளார்.