பஞ்சுமிட்டாய் வாங்க தலைமுடியுடன் நிற்கும் சிறுவர்கள்! நடந்தது என்ன?
பஞ்சு மிட்டாய் விற்கும் வியாபாரியிடம் தலைமுடியை கொடுத்துவிட்டு பஞ்சு மிட்டாய் வாங்கும் குழந்தைகளின் காட்சி வைரலாகி வருகின்றது.
முந்தைய காலங்களில் பண்டமாற்று முறையே நடந்துள்ளது. நம்மிடம் இருக்கும் தானிய வகைகளைக் கொடுத்துவிட்டு உப்பு, ஐஸ், கடல் வகை உணவுகள் போன்ற அத்தியாவசியமான பொருட்களை வாங்குவார்கள்.
இந்த பழக்கம் தற்போது உயிர்பெற்று வருகின்றது. புடியா கே பால் என்று பிரபலமாக அறியப்படும் பஞ்சு மிட்டாயை பிரதாப் சிங் என்கிற தெருவோர வியாபாரி முடியை வாங்கிக்கொண்டு விற்பனை செய்கின்றார்.
இவரிடம் பஞ்சு மிட்டாய் வாங்குவதற்கு வீட்டில் இருந்து குழந்தைகள் தலைமுடியினைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு பஞ்சுமிட்டாய் வாங்கி செல்கின்றனர்.
இதனை அவதானித்த பார்வையாளர்கள் தற்போதும் பண்டமாற்று முறை நடைபெறுவதைக் கண்டு மகிழ்ச்ச்சியடைந்துள்ளனர். சில கிராமங்களில் இன்றும் உதிர்ந்த தலைமுடியைக் கொடுத்துவிட்டு சீப்பு, தலைக்கு பயன்படுத்தும் கிளிப் போன்றவற்றினை வியாபாரிகள் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
தலைமுடி அடர்த்தியாக வளர வேண்டுமா? இதை மட்டும் செய்தால் போதும்