முடியா? துப்பட்டவா? நீயா நானாவில் பெண்களை பங்கமாய் கலாய்த்த கோபிநாத்!
தலைமுடி நீளத்தை வைத்து நீயா நானாவில் கலந்து கொண்ட பெண்களை கோபிநாத் பங்கமாய் கலாய்த்துள்ளார்.
நீயா நானா ஷோ
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் இந்த நீயா நானா.
இந்த ஷோவில் இரண்டு தரப்பினர்களாக போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள். பின்னர் சமூகத்திற்கு தேவையான அனைத்து விடயங்களும் இங்கு கலந்துரையாடப்பட்டு அதற்கான தீர்வுகளும் அந்த நிகழ்ச்சியில் இறுதியில் வழங்கப்படும்.
தொடர்ந்து இந்த ஷோவை தமிழகம் மட்டுமல்ல பலர் கோடி மக்கள் பார்வையிட்டு வருகிறார்கள்.

மேலும் கோபிநாத் பல உண்மை சம்பவங்களுக்கு சார்பாக இருப்பதால் இவருக்கு என ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்து வருகிறார்கள்.
தலைமுடியை எதுக்கெல்லாம் பயன்படுத்துவீர்கள்?
இந்த நிலையில் இந்த வாரம் நீயா நானாவில் நீளமாக தலைமுடி வைத்திருக்கும் பெண்களுக்கும் கட்டையாக தலைமுடி வைத்திருக்கும் பெண்களுக்கு விவாதம் இடம்பெற்றுள்ளது.

அப்போது நீளமாக தலைமுடி வைத்திருக்கும் பெண்கள் தமிழர்களின் கலாச்சாரங்களை கட்டிகாப்பாத்தும் வகையில் ஆடை அணிந்து அதன்படி நடந்து கொள்வது போன்று பேசியிருந்தார்கள்.
கட்டையாக தலைமுடி வைத்திருக்கும் பெண்கள் வேலை, கலாச்சார மாற்றம், விருப்பம் என பல பதில்கள் கூறினார்கள். இந்த தலைப்பு கீழ் அவர்களின் வாதம் இருந்தது.

அந்த வகையில் நீளமாக தலைமுடி வைத்திருக்கும் பெண்கள் வெளியில் செல்லும் போது தலைமுடியை துப்பட்டாவாக பயன்படுத்தி கொள்வார்களாம். இதனை சிரித்தப்படி கோபிநாத் கலாய்த்து பேசியுள்ளார்.
இந்த சம்பவம் அங்கு கட்டைய தலைமுடி வைத்திருப்போரை சற்று சிந்திக்க வைத்திருக்கும் என நம்பப்படுகின்றது.