கொரோனாவை ஓட ஓட விரட்டும் வேப்பிலை! ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட அசத்தலான தகவல்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் இருந்து கொண்டிருக்கும் நிலையில் இதற்கான மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது.
கொல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்தின் (ஐஐஎஸ்இஆர்) ஆராய்ச்சியில் கொரோனா மருந்து குறித்த பல தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவை பூர்விகமாக கொண்டுள்ள வேப்ப மரம், ஒட்டுண்ணி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு சக்திக்காக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது.
வேப்ப மரத்தின் பட்டை சாறு, மலேரியா, வயிறு மற்றும் குடல்புண்கள், தோல் நோய்கள் உள்ளிட்ட பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்க உதவி உள்ளது.
தற்போதைய ஆராய்ச்சி, வேப்ப மரப்பட்டையின் கூறுகள், பரவலான வைரஸ் புரதங்களை குறிவைக்கும் என தெரிய வந்துள்ளது.
இது சார்ஸ் கோவ்-2 உட்பட வளர்ந்து வரும் கொரோனா வைரஸ்களின் மாறுபாடுகளுக்கு எதிராக வைரஸ் தடுப்பு மருந்தாக செயல்படுகிற திறனைக் காட்டுகிறது.
இந்த ஆராய்ச்சியை நடத்திய குழுவில் பங்கு வகித்துள்ள அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழக மருத்துவ கல்லூரியின் பேராசிரியர் மரிய நாகல் கூறுகையில், கொரோனா வைரஸின் கடுமையான ஆபத்தினை குறைக்கும் மருந்தாக உருவாக்குவது தான் குறிக்கோள் என்று கூறியுள்ளார்.
மேலும் வேப்ப மர பட்டை சாறினை விலங்களுக்கு கொடுத்து பரிசோதித்ததில் கொரோனாவிற்கு எதிராக தடுப்பு சக்தி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
வேப்ப மரப்பட்டை சாறு பல்வேறு இடங்களில் உள்ள கொரோனா வைரசின் பைக் புரதத்துடன் பிணைக்கப்பட்டு, வைரஸ் நுழைவை தடுக்கிறது.
கொரோனா பாதித்தவரின் நுரையீரல் செல்களில் செலுத்தியும் பரிசோதிக்கப்பட்டதில், தடுப்பு மருந்தாக பயன்படுத்த முடியும் என்பது தெரியவந்துள்ளது.
கொரோனாவை எதிர்த்து போராடுவதற்கான புதிய வைரஸ் தடுப்பு சிகிச்சைகளுக்கு இந்த கண்டுபிடிப்புகள் வழிகாட்டும் என்று தெரிவித்துள்ளார்.