உணவு ஓடர் செய்த இளம் நடிகை... டெலிவரி பார்சலை பிரித்த போது காத்திருந்த பேரதிர்ச்சி! தீயாய் பரவும் புகைப்படம்
டெலிவரி செய்யப்பட்ட உணவில், கரப்பான்பூச்சி இருந்ததாக நடிகை நிவேதா பெத்துராஜ் தெரிவித்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ்.
இதையடுத்து டிக் டிக் டிக், பொதுவாக எம்மனசு தங்கம், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நிவேதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதில் பிரபல உணவகம் ஒன்றில் சாப்பாடு ஆர்டர் செய்ததாகவும், அங்கிருந்து டெலிவரி செய்யப்பட்ட உணவில், கரப்பான்பூச்சி இருந்ததாகவும் புகார் தெரிவித்துள்ளதுடன் இதற்கு ஆதாரமாக புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
மேலும், கரப்பான் பூச்சியுடன் உணவு டெலிவரி செய்யப்படுவது இது முதல்முறையல்ல என்றும் குறிப்பிட்டு உணவகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.
இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.