நயன்தாரா - விக்னேஷ் சிவனை Unfollow செய்த விவகாரம்! உண்மை இதுதான்
நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் விடயத்தில் உண்மை தன்மை வெளியாகியுள்ளது.
நயன்தாரா
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதிகள் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், இவர்களின் திருமணம் பிரம்மாண்டமாக மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது.
இந்த தம்பதிகள் வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்துள்ள நிலையில், அவ்வப்போது மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தினையும் வெளியிட்டு வருகின்றனர்.
தற்போது நடிகை நயன்தாரா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் விக்னேஷ் சிவனை அன் ஃபாலோ செய்துள்ளதாக நேற்றைய தினம் வைரலாக பேசப்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் இருவரும் பிரியப்போகின்றனரா என்ற குழப்பத்தில் இருந்து வந்தனர். தற்போது இதற்கான பதில் கிடைத்துள்ளது.
அதாவது இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட சிறிய டெக்னிக்கல் பிரச்சினை காரணமாக சிலருடைய ஃபாலோயர்களின் பெயர் காண்பிக்கப்படவில்லை என்றும் தற்போது மீண்டும் ஃபாலோயர்கள் பட்டியலில் விக்கியின் பெயர் உள்ளதும் தெரியவந்துள்ளது.
ஒரு சிறிய டெக்னிக்கல் பிரச்சினையின் காரணமாக இறுதியில் விவாகரத்து வரை சென்றுவிட்டார்களே என்று நயன் தரப்பினர் புலம்பி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |