மன உளைச்சலில் கமிஷ்னர் அலுவலகத்தில் நடிகர் அருண் விஜய்... நடந்தது என்ன?
நடிகர் அருண் விஜய் தன்னை பற்றியும், தனது குடும்பத்தை பற்றி தவறான கருத்தை பிரபல யூடியூப் சேனல் பதிவிட்டுள்ளதாக புகார் கொடுத்துள்ளார்.
நடிகர் அருண் விஜய்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் பட்டியலில் ஒருவராக இருக்கும் அருண் விஜய் அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து வருகின்றார்.
பார்டர் என்ற படத்தில் நடித்து முடித்துள்ள அருண் விஜய், தொடர்ந்து பாலா இயக்கத்தில் உருவாகி வரும் ’வணங்கான்’ என்ற படத்தில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் தனது சகோதரி மகளின் திருமண புகைப்படத்தினை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருந்தது, மிகப்பெரிய அளவில் வைரலானது.
திடீர் புகார் எதற்காக?
இத்தருணத்தில் நடிகர் அருண் விஜய் தனது வழக்கறிஞர் மூலம் கமிஷணர் அலுவலகத்தில் புகார் ஒன்றினை அளித்துள்ளார்.
குறித்த புகாரில், தன்னை பற்றியும் தனது தந்தை விஜயகுமாரின் முதல் மனைவி பற்றியும் அவதூறான கருத்துக்களை பிரபல யூடியூப் சேனல் ஒன்று காணொளி வெளியிட்டுள்ளனர்.
இதனால் தனது குடும்பத்தினரும், தானும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவித்ததுடன், தவறான தகவல்களை பரப்பி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |