லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை தூக்கி எறிந்த நயன்தாரா- ஒரே அறிக்கையால் ஷாக்கான திரையுலகம்
பிரபல நடிகை நயன்தாரா அவருக்கு கொடுக்கப்பட்ட “லேடி சூப்பர் ஸ்டார்” பட்டத்தை வேண்டாம் எனக் கூறி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகை நயன்தாரா
தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகைகளில் ஒருவர் தான் நயன்தாரா.
இவர், ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினிகாந்த், விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்திருக்கிறார்.
ஒரு கட்டத்திற்கு பின்னர் நயன்தாரா தான் அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் ரசிகர்களால் கொடுக்கப்பட்டது.
பட்டத்தை தூக்கி எறிந்த நயன்தாரா
இந்த நிலையில், சமீபக்காலமாக சமூக வலைத்தளங்களில் நயன்தாராவிற்கு எதிராக பல சர்ச்சைகள் கிளம்பி வருகின்றன. இதனால் நயன்தாரா நேற்றைய தினம் அறிக்கையொன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், "நீங்கள் பலரும் எனக்கு லேடி சூப்பர்ஸ்டார் என்று அன்புடன் அழைத்து வாழ்த்தியிருக்கிறீர்கள். உங்கள் பேராதரவால் உருவான இந்தப் பட்டத்திற்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் இனிமேல் என்னை நயன்தாரா என்று அழைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஏனெனில் என் பெயர்தான் எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. அது என்னை மட்டும் குறிக்கிறது - ஒரு நடிகையாக மட்டுமல்ல, ஒரு தனிநபராகவும். பட்டங்களும் விருதுகளும் மதிப்புமிக்கவைத்தான், ஆனால் சில சமயங்களில் அவை நம்மை நம் வேலையிழந்து, நம் கலைத்தொழிலிருந்து உங்கள் அன்பான தொடர்பிலிருந்து பிரிக்கக்கூடும்." என குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிக்கையின் பின்னர் நயன்தாராவிற்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் இருக்காது என்று நெட்டிசன்களால் எதிர்பார்க்கப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |

