முதன்முறையாக குழந்தையுடன் வெளியே வந்த நயன்தாரா! பரபரப்பான காட்சி
நயன்தாரா அவருடைய இரட்டை குழந்தைகளுடன் விமான நிலையத்தில் நடமாடிய காட்சி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சினிமாவில் நயன் செய்த சாதனை
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா. இவருக்கு இணையாக இன்று வரை தமிழ் சினிமாவில் யாரும் இல்லை என சினிமா வட்டாரங்கள் முனுமுனுத்து வருகிறார்கள்.'
இவர் தமிழ் சினிமாவில் இருக்கும் அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து,“ நானும் ரௌவுடி தான்” திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.
இவர்களின் திருமணம் கூட திரைப்படமாக பதிவு செய்யப்பட்டது. மேலும் இவர்களின் திருமணத்திற்கு கலந்து கொள்ளும் பிரபலங்கள் கூட தன்னுடைய ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தக் கூடாது என்ற நிபந்தனையும் வைக்கப்பட்டுள்ளது.
பொது இடத்தில் குழந்தைகளுடன் நயன்
இந்த நிலையில் தற்போது இவர்களுக்கு அழகிய இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்களின் முகம் இது வரைக்கு எந்த புகைப்படத்திலும் காட்டப்படவில்லை என்பதால் இவர்களை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் நாளுக்கு நாள் ரசிகர்களுக்கு கூடிக் கொண்டே செல்கிறது.
இவர்களை பொருத்தமட்டில் குழந்தைகளை யாரும் விமர்ச்சித்து விட கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.
அந்த வகையில் சமிபத்தில் விக்னேஸ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் ஜோடியாக வெளியில் சென்றுள்ளார்கள். அப்போது இரண்டு குழந்தைகளை தோலில் சுமந்தவாறு குழந்தைகளை தூக்கிய இருவரும் கைகளை வைத்து குழந்தைகளின் முகத்தை மறைத்துள்ளார்கள்.
இந்த வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நிலையில், இதனை பார்த்த நயன் ரசிகர்கள், “ பத்து மாதம் சுமந்து குழந்தை பெற்ற நடிகைகளே குழந்தைகளின் முகத்தை காட்டும் போது நயன் ஏன் காட்டாமல் இருக்கிறார். இதற்கு பின்னால் எதுவும் இருக்கிறதா?” என கமண்ட் செய்து வருகிறார்கள்.