புதிய காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரக்சிதா: மீண்டும் கணவருடன் இணைவாரா?
பிக்பாஸ் வீட்டில் ராபர்ட் மாஸ்டருக்கு ஏற்பட்ட காதல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ரக்சிதா.
பிக்பாஸ் ரக்சிதா
பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரில் நடித்தத வேலையில் இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதல் வயப்பட்டு அவரையே திருமணம் செய்துக் கொண்டார்.
ஆனால் தற்போது இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார். இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார்.
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு ராபர்ட் மாஸ்டர் காதல் வலையில் சிக்கி இன்னும் பிரபலமானார்.
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி
இந்நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் இறுதி போட்டியாளர் யார் என்பது தெரியவரும் நிலையில், அனைத்து போட்டியாளர்களையும் பிக்பாஸ் வீட்டில் வரவழைத்து சண்டையும் அன்பையும் காட்டி வருகிறார்.
ரக்சிதா ராபர்ட் மாஸ்டரின் காதல் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தரமாக பேசியிருக்கிறார். அதில் அவர் தெரிவித்தாவது,
என்னை பொறுத்தவரை எனக்கு நீங்கள் செய்தது தப்பாக தெரியவில்லை. யாருக்கும் யாரை வேண்டுமானாலும் பிடிக்கலாம். இனிமே எப்பவும் நீங்கள் என்னுடைய நண்பர் தான் என்று காதல் கிசுகிசுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
இந்த விடயம் இப்படியே வைரலாக நெட்டிசன்கள் ரக்சிதா மீண்டும் கணவருடன் இணைவார் என பதிவிட்டு வருகிறார்கள்.