நயன்தாராவை பார்த்ததும் விக்னேஷ் சிவன் கொடுத்த Reaction! படுவைராகும் காணொளி
7 ஸ்கிரீன் ஸுடியோஸ் மற்றும் ரவுடி பிக்ச்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பேனி திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நடிகை நயன்தாரா சர்ப்ரைஸாக வருகை தந்தால், விக்னேஷ் சிவன் எமோஷ்னல் ஆன காணொளி இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
lik திரைப்பட விழா
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள lik திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது.

பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார். சீமான் பிரதீப் ரங்கநாதனின் தந்தையாக நடித்துள்ளார்.கீ்ர்த்தி ஷெட்டி , கெளரி கிஷன் நாயகியாக நடித்துள்ளார்கள்.
அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக இருந்த இப்படம் சில காரணங்களால் திரைக்கு வராமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், எதிர்வரும் 10 ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது.

இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் புரமோஷன் நிகழ்ச்சி என்பன இன்றைய தினம் நடைபெற்றுள்ளது. அதில் தனது உரையின் போது, விக்னேஷ் சிவன், பொது திரைப்பட விளம்பரங்களைத் தவிர்ப்பது என்ற நடிகை நயன்தாராவின் நன்கு அறியப்பட்ட விதிகளில் ஒன்று எனவும் அதனால் அவரை அழைத்துவர முடியாமவல் போய்விட்டது என பேசினார்.

மேலும் அவர் தனது மனைவியாகவோ அல்லது படத்தின் தயாரிப்பாளராகவோ வரக்கூடும் என்று நகைச்சுவையாகக் கூறியது, பார்வையாளர்களைச் சிரிக்க வைத்தது.
இவர் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கையில், எதிர்பாராத வகையில் நடிகை நயன்தாரா மேடைக்கு வந்து விக்னேஷ் சிவனை கட்டியணைத்தார். குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |