உயிர், உலகத்துடன் முதல் ஓணம் பண்டிகையை கொண்டாடிய நயன் - விக்கி: வைரலாகும் புகைப்படங்கள்
தனது குழந்தைகளுடன் முதல் ஓனத்தை கொண்டாடிய நயன்-விக்கி குழந்தைகளின் புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
நயன்தாரா - விக்னேஷ் சிவன்
தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் தான் நயன்தாரா, இவர் நடிகர்களுக்கு இணையாக சம்பளம் பெரும் ஸ்டார் நடிகையாகவும் இருக்கிறார்.
நயன்தாரா 2015ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரௌடிதான் படத்தில் நடித்தார். அந்த வேளையில் இருவருக்கும் காதல் மலர்ந்து பிறகு கடந்த ஆண்டு ஜுன் 9ஆம் திகதி திருமணமும் செய்துக் கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு 4 மாதங்களில் வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டதாக அறிவித்திருந்தார். மேலும், இந்த இரட்டைக் குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என வித்தியாசமான பெயரையும் வைத்திருக்கிறார்.
குழந்தைக்குடன் ஓணம்
எப்போதும் குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிடும் நயன்தாரா விக்னேஷ்சிவன் அடிக்கடி தங்களின் குழந்தைகளின் புகைப்படத்தை மறைத்து வெளியிடுவார்கள்.
இந்நிலையில், இந்த வருடம் தனது குழந்தைகளானஉயிர், உலகத்துடன் முதல் ஓணம் பண்டிகையை கொண்டாடி புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.
இந்தப் புகைப்படத்தைப் பார்த்து நயனின் குழந்தைகள் இவ்வளவு வளர்ந்துட்டாகளா? என்று நெட்டிசன்கள் பலரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |