நயன்தாராவின் வாடகை தாய் விவகாரம்! கலக்கத்திற்கு மத்தியில் கொடுத்த நச் பதில்
அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டு அவதிப்படும் நடிகை சமந்தா, நயன் விக்கி இரட்டை குழந்தைகள் பிரச்சினைக்கு நச்சென்று பதில் அளித்துள்ளார்.
நடிகை சமந்தா
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம்வரும் நடிகை சமந்தா சமீபத்தில் தனக்கு தசை அழற்சி நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதற்கான சிகிச்சையில் இருப்பதாகவும் விரைவில் முழுவதும் குணமடைவேன் என்றும் கூறியிருந்தார்.
சமந்தா நடிப்பில் யசோதா என்ற பெயர் கொண்ட திரைப்படம் சில தினங்களில் வெளியாகிறது. இப்படத்திற்கான விளம்பர நிகழ்ச்சியின் போது பல விடயங்களை பகிர்ந்து கொண்டார்.
நான் உயிருக்கு ஆபத்தாக நிலையில் உள்ளதாக சில செய்திகளைப் பார்த்தேன். நான் சாகவில்லை எனது வலிகளை நான் தாங்கிக் கொண்டு மீண்டு வருவேன் என்று கண்ணீர் மல்க கூறினார்.
நயன் விக்கி இரட்டை குழந்தை
தற்போது தமிழகத்தில் வாடகை தாய் பிரச்சினை பூதாகரமாக எழுந்து வருவதாகவும், நயன் விக்கியின் வாடகை தாய் குறித்த கேள்வியும் அவரிடம் கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த சமந்தா, வாடகை தாய் பிரச்சினை பூதாகரமாக வெடித்ததால் தான், யசோதா படத்தில் நடிக்கவில்லை. சில ஆ்டுகளுக்கு முன்பே இந்த படத்தில் நடித்து முடித்துவிட்டேன்.
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொள்வது ஒன்றும் தவறில்லை. அதனால் மகிழ்ச்சி என்றால் அதனை செய்யலாமே... மேலும் யசோதா படத்திற்கு இதனால் இலவச ப்ரொமோஷன் கிடைத்துள்ளதாகவும் சமந்தா ஓபனாக கூறியுள்ளார்.