நயன்- விக்கி திடீரென குலதெய்வ வழிப்பாட்டிற்கு பின்னணி என்ன? வெளியான தகவல்
நயன்-விக்கி திடீரென குலதெய்வ வழிப்பாட்டிற்கு பின்னணி குறித்த தகவல் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகை நயன்தாரா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரை ரசிகர்கள் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அன்போடு அழைத்து வருகின்றனர்.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஆண்டு ஜூன் 9-ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் நடந்து 4 மாதமே ஆன நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில், நயன்தாராவும், நானும் அப்பா, அம்மா ஆகிவிட்டோம் என்று இரட்டை குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டார். இந்த விவகாரம் சினிமாத்துறையில் சலசலப்பை ஏற்படுத்தியது.
குழந்தைகளின் பெயர் அறிவிப்பு
இத்தம்பதி தற்போது குழந்தைகளின் முழு பெயரையும் வெளியிட்டனர். உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் என குழந்தைகளின் பெயர்களுக்கு கடைசியில் முதலில் நயன்தாராவின் N வருவது போலவும் கடைசியில் விக்னேஷ் சிவனின் சிவன் வருவது போலவும் பெயர் வைத்துள்ளனர்.
நயன்தாரா - விக்னேஷ் வழிபாடு
திடீரென கடந்த 5ம் தேதி குலதெய்வ கோலில் வழிபாடு செய்ய திருச்சி விமான நிலையத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் வந்திறங்கினர்.
இதனையடுத்து, கும்பகோணம் அடுத்த தாராசுரம் பகுதியில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயிலில் விக்னேஷ் சிவனுடன், நயன்தாரா சாமி சென்று சாமி தரிசனம் செய்தனர்.
சாமி தரிசனம் முடித்து விட்டு வரும்போது, கல்லூரி மாணவர்கள் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
குலதெய்வ வழிப்பாட்டிற்கு பின்னணி என்ன?
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திடீரென நயன் மற்றும் விக்கி தாராசுரம் வந்து தனது குலதெய்வ வழிபாட்டை நடத்தினார்கள். இதற்கு பின்னணி காரணம் குறித்த தகவல் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
விக்கி, நயன் திருமணத்திற்கு பிறகு இருவருக்குமே தொட்ட காரியம் எல்லாமே இறங்கு முகமாகத்தான் உள்ளதாம். இவர்கள் ‘கூழாக்கல்’ என்ற திரைப்படத்தை தயாரித்து இன்னும் அப்படம் வெளியாகமலே பிரச்சினையில் இருக்கிறது.
மேலும், நயன்தாரா நடித்த ‘கனக்ட்’ படமும் பெரிய அளவில் ப்ளாப் ஆனது. அப்படத்தில் சாட்டிலைட் உரிமமும், இன்னும் விற்றாகவில்லையாம். விக்னேஷ் சிவனுக்கு அஜித் படம் பறிபோனது. இன்னொரு பக்கம் வந்த வாய்ப்புகள் எல்லாம் நயனை விட்டு பறிப்போகிறது.
இவர்கள் திருமணம் நடந்த பிறகு இன்னும் இவர்கள் குலதெய்வ கோயிலுக்கு வந்து தரிசனம் செய்யவில்லை என்று விக்கியின் உறவினர்கள் வருத்தப்பட்டுள்ளனர்.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் நயன், விக்கி இருவரும் குலதெய்வ கோயிலுக்கு வந்து வழிபாடு நடத்தியுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.