நயனின் குழந்தைகளை பார்த்துருக்கீங்களா? இன்ஸ்டா பதிவில் லீக்கான புகைப்படம்
இயக்குநர் விக்னேஷ் சிவன் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்கள் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் விக்னேஷ் சிவன் எப்படி பிரபலமானார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் பிரபல்யமடைந்து வரும் இயக்குநர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன் கடந்த வருடம் தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் நயன்தாரா காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
இவரின் காதல் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான,“ நானும் ரவுடி தான்” என்ற படத்திலிருந்து ஆரம்பமானது என அடிக்கடி விக்னேஷ் சிவன் அவர்கள் கூறுவார்கள்.
இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில், போடா போடி, நானும் ரவுடி தான், காத்து வாக்குல இரண்டு காதல் உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இவருக்கும் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. இவரின் படங்கள் வித்தியாசமான கதையம்சத்தை கொண்டிருப்பதால் ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது.
நயனின் குழந்தைகளை பார்த்துருக்கீங்களா?
இந்த நிலையில் இவர் திருமணம் முடிந்து சில மாதங்கள் வெளிநாட்டிலிருந்து வந்தார். இதற்கு இடைப்பட்ட காலத்தில் விக்னேஷ் சிவன் அவர்கள் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
இவர்களின் பெயர்கள் மற்றும் முகங்கள் இது வரையில் வெளியிடப்படவில்லை.
அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் விக்னேஷ் சிவன் தற்போது ஒரு குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை “என் குழந்தைகளுடன் எல்லா தருணங்களையும் சுவாசிக்கவும் உணரவும் எனக்கு சிறிது நேரம் கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி,
வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் அனைத்து வலிகளிலும் ஒரு நன்மை இருக்கிறது, பாராட்டும் , வெற்றியும் நமக்குக் கற்பிப்பதை விட, அவமானம் மற்றும் தோல்வியின் அனுபவம் நிறைய கற்றுக்கொடுக்கிறது” என குறிப்பிட்டு வெளியிட்டுள்ளார்.
இதில் பார்க்கும் போது நயனின் குழந்தைகளும், நயன் நிறத்தில் கொலு கொலு என இருப்பது போல் தெரிகிறது. இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.