திருமணமான நயன்தாரா, விக்கி ஜோடியின் சொத்து மதிப்பு என்ன? வாயடைத்துப் போன ரசிகர்கள்
புதுமண தம்பதிகளான விக்னேஷ் சிவன், நயன்தாரா ஆகிய இருவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நயன்தாரா விக்கி திருமணம்
தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம்வந்த நயன்தாரா விக்கி ஜோடிகள் 8 ஆண்டுகளுக்கு மேல் காதலித்து வந்த நிலையில் கடந்த 9ம் தேதி பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களின் திருமணத்திற்கு ரஜினிகாந்த், ஷாருக்கான் என பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். திருமணத்திற்கு வந்தவர்களுக்கு நயன்தாரா பிரம்மாண்ட விருந்து மட்டுமின்றி விலை உயர்ந்த பரிசும் கொடுத்துள்ளார்.
திருமணம் முடிந்து திருப்பதி கோவிலுக்குச் சென்ற இந்த ஜோடிகள் சர்ச்சையில் சிக்கி பின்பு மன்னிப்பு பதிவு ஒன்றினை விக்கி வெளியிட்டார்.
நெட்டிசன்களின் தேடல்
திருமணத்தில் நயன்தாரா அணிந்திருந்த ஆடை மற்றும் நகைகள் குறித்த தேடல் அதிகமான நிலையில், அதற்கான விளக்கத்தினை அவதானித்த போது பாரம்பரிய முறை மாறாமல் அனைத்தையும் சிறப்பாக செய்துள்ளார்.
இதுமட்டுமின்றி இவர்களின் திருமணத்திற்கு பின்பு இவர்களைக் குறித்த தேடலை அதிகமாக நெட்டிசன்கள் தேடி வருகின்றனர்.
இருவருக்கும் இடையேயான வயது வித்தியாசம், திருமணம் முடிந்ததும் அவர் அணிந்து வந்த புடவை, நகை இவர்கள் திருமணத்திற்காக செய்யப்பட்ட மொத்த செலவு ஆகிய தலைப்புக்களை தான் இணையத்தில் அதிகம் தேடி வருகின்றனர்.
இருவரின் சொத்து மதிப்பு என்ன?
இந்த நிலையில், தற்போது புதுமண தம்பதிகளான விக்கி - நயன்தாரா ஆகிய இருவரின் சொத்து மதிப்பு பற்றிய தகவல் இணையத்தில் செம்ம வைரலாக பரவி வருகிறது.
அதன்படி, இந்திய விமானப் படையில் பணியாற்றியவரின் மகளான நயன்தாரா, ஒவ்வொரு படத்திற்கும் ரூ. 3 கோடி முதல் ரூ. 5 கோடி வரை சம்பளம் பெறுபவர். எனவே, இவரது சொத்து மதிப்பு ரூ. 71 கோடி வரை இருக்கும் என கணிக்கப்படுகிறது.
மேலும், வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன், ஒவ்வொரு படத்திற்கும் ரூ. 1 முதல் ரூ. 3 கோடி வரை சம்பளம் பெறுபவர். அதன்படி, இவரின் சொத்து மதிப்பு ரூ. 50 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.
