அடடே இவ்வளவு வளர்ந்துட்டாங்களா? நயன்தாராவின் மகன்கள் எப்படி இருக்காங்க பாருங்க
நயன்தாராவின் குழந்தைகள் அவர்களுக்கு திருமண நாள் வாழ்த்து கூறுவது போல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.
சினிமா வாழ்க்கை
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா. இவருக்கு இணையாக இன்று வரை தமிழ் சினிமாவில் யாரும் இல்லை என சினிமா வட்டாரங்கள் முனுமுனுத்து வருகிறார்கள்.
இவர் தமிழ் சினிமாவில் இருக்கும் அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர், சுமார் 20 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து,“ நானும் ரௌவுடி தான்” திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.
இந்த நிலையில் தற்போது இவர்களுக்கு அழகிய இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள்.
அப்பா - அம்மாவிற்கு வாழ்த்து செய்தி கூறிய மகன்மார்
இதனை தொடர்ந்து இன்றைய தினம் நடிகை நயன்தாரா - விக்னேஷ்சிவன் இருவரின் முதல் வருட திருமண நாள்.
இதனால் விக்னேஷ்சிவன் தன்னுடைய குழந்தைகளுடன் நயன்தாரா இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்து செய்தி பகிர்ந்துள்ளார்.
தொடர்ந்து இருவருக்கும் பல சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து செய்தி பகிர்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நயனின் குழந்தைகள் இருவரும் “திருமண நாள் வாழ்த்துக்கள் அப்பா - அம்மா” என கூறுவது போன்ற புகைப்படமொன்று எடுக்கப்பட்டுள்ளது.
இந்த புகைப்படத்தை பகிர்ந்து இயக்குநர் விக்னேஷ்சிவன் நன்றியும் கூறியுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது என்பதுடன், இதனை பார்த்த ரசிகர்கள் வாழ்த்து செய்திகளும் பதிவிட்டு வருகிறார்கள்.