படங்களிலிருந்து திடீரென நீக்கப்பட்ட நயன்தாரா! அதிர்ச்சியில் ரசிகர்கள்
இயக்குனர் விக்னேஷ் சிவனைத் தொடர்ந்து நடிகை நயன்தாரா, இரண்டு படங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
விக்னேஷ் மற்றும் நயன்தாரா
இயக்குனர் விக்னேஷ் மற்றும் நடிகை நயன்தாரா ஜோடிகள் 7 ஆண்டுகள் காதலித்து கடந்த ஜுன் மாதம் திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமணமான மூன்று மாதத்தில் வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோராகினர்.
இந்த குழந்தைகளை மிகவும் கவனமாகவே பார்த்து வருகின்றனர், அதிலும் நயன்தாரா நடிப்பிற்கு பிரேக் விட்டு தனது குழந்தைகளை கவனித்து வருகின்றார்.
பிஸியான கதாநாயகியாக வலம்வரும் நயன்தாராவை, இரண்டு படங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கோலிவுட்டில் தகவல் வெளியாகியுள்ளது.
படத்திலிருந்து நீக்கப்பட்டது ஏன்?
நடிகை நயன்தாரா, கடந்த 2021-ம் ஆண்டு முன்னணி தயாரிப்பாளர் ஒருவரின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் 2 படங்களில் கதையின் நாயகியாக நடிக்க கமிட் ஆனாராம்.
இதற்காக படத்துக்கு தலா ரூ.10 கோடி வீதம் மொத்தமாக ரூ.20 கோடி சம்பளமாக பேசப்பட்டு இருந்ததாம்.
ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் கால்ஷீட் கொடுக்காமல் நடிகை நயன்தாரா இழுத்தடித்து வந்ததால், கடுப்பான அந்த தயாரிப்பாளர், நயன்தாரா உடனான 2 படத்திற்கான ஒப்பந்தத்தை கேன்சல் செய்ததோடு, அவருக்கு கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் தொகையையும் திருப்பி வாங்கி உள்ளாராம்.
ஏற்கனவே நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் அஜித்தின் ஏகே 62 படத்தில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தற்போது நடிகை நயன்தாரா அடுத்தடுத்து இரண்டு படங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ள தகவல் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்தே விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடிக்கு இப்படி அடிமேல் அடி விழுந்து வருவதை பார்த்து அவர்களது ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர்.
இதிலிருந்து மீண்டு அவர்கள் இருவரும் சினிமாவில் கம்பேக் கொடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.