நயன்தாரா குணமே இது தான்! உண்மைகளை போட்டுடைத்த சரண்யா பொன்வண்ணன்
நடிகை நயன்தாரா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரை ரசிகர்கள் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அன்போடு அழைத்து வருகின்றனர்.
நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஆண்டு ஜூன் 9-ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் நடந்து 4 மாதமே ஆன நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில், நயன்தாராவும், நானும் அப்பா, அம்மா ஆகிவிட்டோம் என்று இரட்டை குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டார். இந்த விவகாரம் சினிமாத்துறையில் சலசலப்பை ஏற்படுத்தியது.
சரண்யா பொன்வண்ணன் பேட்டி
இளம் ஹீரோக்கள் மற்றும் முன்னணி ஹீரோக்கள் படங்கள் என பல படங்களில் கலக்கி வருகிறார் சரண்யா. நிறைய நடிகர் மற்றும் நடிகைகளுடன் நடிப்பதால் அவ்வப்போது அவருடைய பேட்டிகளில் தன்னுடைய சக கலைஞர்களை பற்றி பகிர்ந்து கொள்வார்.
சமீபத்தில் நடிகை சரண்யா பொன்வண்ணன் ஒரு தனியார் சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது, நயன்தாரா குறித்து அவர் பல தகவலை பகிர்ந்து கொண்டார்.
அவர் பேசுகையில்,
நடிகை நயன்தாரா ரொம்பவும் நேர்மையானவர். அவர் யாருடனாவது பேசவில்லை என்றால் அந்த நபர் தான் ரொம்ப கெட்டவராக இருப்பார். யாராவது தனக்கு எதிராக இருக்கிறார்கள் என்றால் அவர்களிடமிருந்து நயன்தாரா விலகிவிடுவார். அதற்கு காரணம் அது போன்ற ஆட்களை நயன்தாராவால் சமாளிக்க முடியாது. எப்போதுமே பாசிட்டிவாக மட்டுமே நயன்தாரா பேசுவார். இந்த குணம் தான் அவருக்கு என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.