உயர் ரத்த அழுத்த பிரச்சினைக்கு மருந்து தேடி அலைப்பவரா நீங்க?, அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்காக..
நாளாந்தம் உயர் ரத்த அழுத்த பிரச்சினையால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கின்றது.
இந்த நோயானது, உடல் எடை அதிகரிப்பு, உடலில் கொழுப்பு அதிகம் படிதல், மன அழுத்தம், கார்போஹைட்ரேட் உணவுகளை அதிகம் உட்க் கொள்ளல் உள்ளிட்ட காரணங்களால் ஏற்படுகின்றது.
மேலும் முறையான சிகிச்சை, கட்டுக்கோப்பான உணவு பழக்கங்கள் ஆகியவற்றால் மாத்திரமே இதனை கட்டுக்குள் வைக்க முடியும்.
அந்த வகையில் உயர் ரத்த அழுத்த பிரச்சினையை எப்படி கட்டுபடுத்துவது என தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
உயர் ரத்த அழுத்த பிரச்சினையை கட்டுபடுத்தும் வழிமுறைகள்
1. தினமும் குறைந்த பட்சம் 20 நிமிடங்கள் சரி நடக்க வேண்டும். தினமும் இந்த முறையை பின்பற்றினால் இலகுவாக உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கலாம்.
2. வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை மீன் சாப்பிட வேண்டும். இதனால் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுகின்றது.
3. மதுப்பழக்கம், புகைப்பழக்கம் ஆகியவற்றை அடியுடன் அகற்றி விட வேண்டும்.
4. உணவில் காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்வது உடம்பிற்கு சிறந்ததாக இருக்கும். ரத்த அழுத்திற்கு உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானதாகும்.
5. தினமும் உணவில் பூண்டு சேர்த்துக்கொள்வது அவசியமானது. ஏனெனின் பூண்டில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் ரத்த அழுத்த பிரச்சினையை தடுக்கின்றது.
6.“செலரி” எனப்படும் கீரையின் தண்டு பகுதியை சாப்பிடுவது நல்லது. அத்துடன் எடையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் இதனை சாப்பிடலாம்.
7. மருத்துவரின் பரிந்துரையிற்கமைய தினமும் மாத்திரைகளை நேரத்திற்கு எடுத்து கொள்ள வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |