நோயற்ற வாழ்க்கை சிறந்த இந்த உணவு பழக்கங்களை பின்பற்றுங்கள்; சித்தர்களின் ரகசியம்.. முழு காணொளி விளக்கத்துடன் இதோ
கொரோனா ஊரடங்கு காலத்தில் பலருக்கும் நோய் ஏற்பட முக்கிய காரணமே நோய் எதிர்ப்பு சக்தி தான். சரியான உணவு பழக்க முறைகளை பின்பற்றாமல் இருப்பதே முக்கிய காரணம். இப்பதிவில் சரியான உணவு பழக்கங்களை எப்படி பின்பற்றி நோயில் இருந்து நம்மளை தற்காத்துகொள்ள வேண்டும் என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்.
முதலில், காலை எழுந்தவுடன் அவசரமாக சாப்பிட்டு செல்வதை தவிர்க்கவும், பலரும் ப்ரட் ஜாம் என இதை காலை உணவாக எடுத்துக்கொள்கின்றனர். மைதா உணவையும் முக்கியமாக தவிர்க்கவேண்டும். அதற்கு பதிலாக சத்துமாவு கஞ்சி காலை வேளையில் சாப்பிடலாம்.
செவ்வாழை சாப்பிடலாம். மதிய வேளையில், கீரை சாதத்தை எடுத்துகொள்ளலாம் இதனால் சர்க்கரை நோயை கட்டுபடுத்த முடியும். அதேப்போல், பீட்சா, பர்கர் என இன்றைய நவீன உணவுகளை குறைப்பது நல்லது. அதற்கு பதிலாக கல்லை மிட்டாய், பொறி உருண்டை போன்றவற்றை சாப்பிடலாம்.
மேலும், எண்ணெய் சார்ந்த உணவு பொருளையும் குறைத்துகொள்வதால், உடலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறும். இதனையடுத்து, உடல் எடை குறைக்கவும், அதிகப்படுத்தவும், சரியான உயரத்திற்கு ஏற்ப எடையை வைத்திருக்க வேண்டும். அதிகப்படியான தண்ணீரை குடிக்க வேண்டும்.
சரியான நேரத்திற்கு உணவினை எடுத்துகொள்ளவேண்டும். உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்களுக்கு, உடல் சூடு அதிகமாக இருந்தால் உடல் எடை அதிகரிப்பதில் சிக்கலாக இருகும். அதற்கு, அவர்கள் முதலில் உடல் சூட்டை தனிக்க வேண்டும், வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
எலுமிச்சை ஜூஸ் தினமும் பருகலாம். பாலில் தேன் ஊறவைத்து இரவில் குடிக்கலாம். கீரை, நட்ஸ், தேங்காய்பால், பருப்பு சார்ந்த உணவுகளை பின்பற்றலாம்.. கீழே கொடுக்கப்பட்டுள்ள காணொளியின் மூலம் முழு விளக்கத்தையும் காணலாம்..