முடி அதிகமாக கொட்டுகிறதா? நீளமான அடர்த்தியான கூந்லுக்கு இந்த ஒரு ஹேர் பெக் போதும்
பெண்களுக்கு அழகை கொடுப்பது அவர்களின் கூந்தல் என்பார்கள். இந்த கால கட்டத்தில் அதாவது அவசரமான சூழலில் முடி உதிரும் பிரச்சனை அதிகமாக உள்ளது.
இதற்கு காரணம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காத காரணம். மற்றும் சரியான உறக்கமின்மை போன்ற அனேக காரணங்கள் உள்ளன.
எனினும் நாம் கெமிக்கல்களை பயன்படுத்தாமல் வீட்டில் நமே தயாரிக்க கூடிய ஹேர் பெக்குகள் இருக்கின்றன. இதனால் நமது முடி உதிர்வது நிறுத்தப்பட்டு அடர்த்தியான பளபளப்பான முடியை பெற உதவும்.
இந்த ஹர் பெக்கை எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஹேர் பெக்
முடி தன் ஊட்டச்நத்தை இழந்து கொட்டுகிறது இதற்கு தேவையான ஊட்டச்சத்து ஹேர் பெக்கை செய்ய தேவையான பொருட்கள். சிவப்பு செம்பருத்தி நான்கு எடுத்து கொள்ள வேண்டும்.
2 டீஸ்பூன் வெந்தயம் (முதல் நாள் இரவு ஊற வைத்தது). தயிர் 2 டீஸ்பூன் ஒரு பெரிய துண்டு கற்றாளை ஜெல் இவை அனைத்தையும் சேர்த்து ஒரு மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
இதனை நீங்கள் ஒரு தடவை போட்டால் உங்கள் முடி உதிர்வு நிற்காது. இதை வாரத்தில் இரண்டு நாட்கள் பயன்படுத்த வேண்டும்.
இதை பயன்படுத்திய பின்னர் தலைக்கு ஷாம்பூ போட்டு குளிக்காமல் அரிசி கழுவிய தண்ணீர் அல்லது சாதம் வடித்த தண்ணீரை தலையில் தேய்த்துக் குளித்தால் தலை முடி பளபளப்பாக பட்டுப்போல் வளரும்.
இதை தவிர தலையில் இருக்கக் கூடிய பொடுகு தொல்லை இல்லாமல் போய் முடி வறட்சி தன்மையை இழக்கும். இந்த பெக்கை தலையில் போட்டு நீங்கள் அரை மணி நேரத்தின் பின் குளிக்கலாம்.
இந்த படிமுறை கட்டாயம் செய்தால் முடி நீங்கள் நினைத்ததை விட அழகாக வளரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |