கல்லீரலை சுத்தப்படுத்தும் கோவக்காய் குழம்பு... இப்படி ஒருமுறை செய்து பாருங்க
கோவக்காய் ஒரு சிறந்த இயற்கை மருந்தாக காணப்படுகின்றது. இது கல்லீரலை பாதுகாப்பதில் முக்கியமாக ஒரு காயாக பார்க்கப்படுகின்றது.
வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை உணவுகளில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் இருக்கும் கிருமிகள் மற்றும் நச்சுகள் வெளியேறி கல்லீரல் வீக்கம் குறைக்க பெரிதும் துணைப்புரிகின்றது.
இரும்புச்சத்து, பொட்டாசியம், போன்ற தாதுக்கள் கோவக்காயில் அதிகமாக இருக்கிறது. இவை எலும்பு வளர்ச்சி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கத்திற்கு உதவுகிறது.
கோவக்காய் பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புக்களில் தேங்கும் கழிவுகளையும் வெளியேற்றுவதில் பெறும் பங்கு வகிக்கின்றது.
இத்தனை மருத்துவ குணம் கொண்ட கோவைக்காயை கொண்டு அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையான குழம்பு எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கோவக்காய்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 கரண்டி
மஞ்சள் தூள் - 1 கரண்டி
மிளகாய் தூள் - 1/2 கரண்டி
கொத்தமல்லி தூள் - 1 கரண்டி
மிளகு தூள் - 1/2கரண்டி
கடலை மாவு - 2 கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
சீரகம் - 1 கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நீளவாக்கில் நறுக்கிய கோவக்காயை அதில் போட்டு சிறிதளவு உப்பு சேர்த்து 3 நிமிடங்களுக்கு வரை நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை தனியாக எடுத்து வைத்துவிட்டு அதே கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தததும் சீரகம் சேர்த்து பொரிந்ததும் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை போட்டு பொன்நிறமாகும் வரை நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் கடலை மாவு, நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் தக்காளி ஆகியவற்றையும் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதன்பின் இஞ்சி பூண்டு பேஸ்ட், கசூரி மேத்தி மற்றும் தேவையான அளவு கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்க வேண்டும்.
பின்னர் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.
மசாலாக்களின் பச்சை வாசனை போனதன் பின்னர் இதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வரையில் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
குழம்பு நன்றாக கொதிக்கும் நிலையில் வதக்கி வைத்துள்ள கோவக்காயை அதில் போட்டு 10 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். கடைசியில் மிளகு தூளை தூவி இறக்கினால் மணமணக்கும் சுவையான கோவக்காய் குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |