Water Melon: தர்பூசணி உடம்பிற்கு தீமையை ஏற்படுத்துமா? அதிர்ச்சி தகவல்
வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில் தர்பூசணி விற்பனை அதிகரித்துள்ள நிலையில் பழத்தை சிவப்பாக காட்ட ரசாயனம் கலக்கும் செயல்களிலும் சிலர் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
தண்ணீர் பழம்
அதிக தண்ணீர் சத்துக்கள் கொண்டுள்ள தண்ணீர் பழத்தினை வெயில் காலத்தில் மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். ஏனெனில் இதில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது.
வெயில் காலங்களில் ஏற்படும் நீரிழப்பை தடுக்கும் இந்த பழத்தில், ரத்த சிவப்பாக இருந்தால் நன்றாக பழுத்த பழம் என்ற நம்பிக்கை காணப்படுகின்றது.
ஆனால் இந்த கலருக்காக வண்ண சாயங்களை ஊசி மூலம் செலுத்தி விற்பனை செய்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கலர் பொடியை சர்க்கரை பாகுவில் கலந்து பூசுவதை விற்பனையாளர்கள் செய்கின்றனர் என்றும் இது உடம்பிற்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறப்படுகின்றது.
தர்பூசணி வாங்குவதில் கவனம்
வெட்டப்பட்ட தர்பூசணி துண்டுகளை கையாள்வதும், நீண்ட நேரம் திறந்தவெளியில் வைத்திருப்பதால் சுகாதாரமற்ற சூழலால் கெட்டுப் போகவும் செய்கின்றது. இதனை மறைப்பதற்கு விற்பனையாளர்கள் இவ்வாறான யுக்தியை செய்கின்றனர்.
தர்பூசணி ஜூஸ் தயாரிக்க விற்பனையாளர்கள் சுகாதாரமற்ற தண்ணீர் மற்றும் ஐஸ் கட்டிகளை பயன்படுத்துகிறார்கள். கண்ணாடி டம்ளர்களை ஓடுகிற தண்ணீரில் கழுவுவதில்லை.
ஒரு வாளி தண்ணீர் வைத்துள்ளார்கள். அதிலேயே தொடர்ந்து டம்ளர்களை கழுவுகிறார்கள். இது கடுமையான உடல்நல கோளாறை ஏற்படுத்தலாம்.
ஏனெனில் அசுத்தமான தண்ணீர் உணவில் பரவும் நோய்களுக்கு வழிவகுக்கும். தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை கொண்டு உள்ளது.
ஆகவே தண்ணீர் பழம் வாங்க வேண்டும் எனில் முழு பழமாக வாங்கிவிட்டு, வீட்டிற்கு சென்று வெட்டி சாப்பிட்டால் எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |