சூப்பர் சிங்கர் புகழ் சிவாங்கியின் காதலனா இது? அவரே வெளியிட்ட புகைப்படம் வைரல்!
சூப்பர் சிங்கர் புகழ் சிவாங்கி ஒரு நபரை கட்டியணைத்தப்படி தற்போது தனது சமூக வலைத்தப்பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒற்றை புகைப்படம் இணையத்தில் படுவைரலாகியுள்ளது.
சிவாங்கி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் சிவாங்கி.

இவர் பிரபல பாடகி ஸ்ரீமதி பின்னி கிருஷ்ணகுமாரின் மகள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனாலும் வாய்ப்புகளை செல்வாக்கை பயன்படுத்தி எளிமையாக பெறாமல் திறமையை நிரூபித்து பெற்றவர்களுள் இவரும் ஒருவர்.
பாடகியாக அறிமுகமாகிய சிவாங்கி குழந்தை போல நகைச்சுவையாகவும் வெளிப்படையாகவும் பேசுவதால், அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளியில் கோமாளியாக பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார்.

பின்னர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையிலும் தனது திறமையை நிரூபித்தார்.
முதல் படத்திலேயே அசத்தலாக நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

தற்போது மேடை நிகழ்சிகளில் அதிகம் பங்கேற்று வரும் சிவாங்கி சமூக வளைத்தளங்களிலும் அதிக ஈடுபாடு காட்டி வருகின்றார். அண்மையில் தனது சொந்த உழைப்பில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் பெறுமதியான புதிய மெர்சிடிஸ் பென்ஸ் GLE கார் ஒன்றையும் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவாங்கியின் காதலனா?
சமீபத்திய பேட்டியொன்றில் சிவாங்கியில் அம்மாவும் பிரபல பாடகியுமான ஸ்ரீமதி பின்னி கிருஷ்ணகுமார் சிவாங்கியின் திருமணம் குறித்து கேட்கப்ட்ட கேள்விகளுக்கு வெளிப்படையாக பதிலளித்தார்.

அவர் குறிப்பிடுகையில், கடந்த இரண்டு வருடங்களாகவே சிவாங்கிக்கு வரன் பார்த்து வருவதாகவும், சிவாங்கியே தனக்கான துணையை தேடிவதற்கும் சுதந்திரம் கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுடிருந்தார்.
இந்நிலையில், ஒரு நபரை காதலுடன் கட்டியணைத்தப்படி சிவாங்கி வெளியிட்டுள்ள ஒற்றை புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. இது பற்றி எந்த பதிவையும் குறிப்பிடாமல் சிவாங்கி புகைப்படத்தை மட்டும் வெளியிட்டுள்ளதால் ரசிகர்கள் யார் இவர் என குழப்பமடைந்துள்ளனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |