இனி தலைமுடிக்கு வாசனை திரவியம் வேண்டாம் - இந்த பொடியை குளித்ததும் போடுங்க
எல்லோரும் தலைமுடிககு வாசனை திரவியம் வாங்கி பயன்படுத்துவார்கள். அது தலைமுடியை எப்போதும் வாசனையுடன் வைத்திருக்கம். ஆனால் இதனால் சரும பாதிப்புக்களும் வரும்.
பொதுவாக இவை இரசாயனம் கலவை செய்யப்பட்டதாக இருக்கும். முற்காலத்து பெண்கள் தலைமுடிக்கு எண்ணெய் தேய்த்து குளித்து வருவார்கள்.
பின்னர் சீகாக்காய தூள் போட்டு சிறுவர்கள் மதல் பெரியவர்கள் வரை குளித்து வருவார்கள். இதன் பின்னர் பல வாசனை பொருட்கள் போட்டு சாம்பிராணி புகையூட்டி தலைமுடியை இயற்கை வாசனையுடன் வைத்திருப்பார்கள்.
அந்த பழங்கால முறையில் எப்படி முடியை வாசனையாக வைத்திருப்பது என்பதை பார்க்கலாம்.

தலைமுடிக்கு இயற்கை வாசனை
தலைக்கு எண்ணையோ, ஷாம்போ போட்டு குளித்ததும் நன்றாக துடைத்து விட்டு இயற்கையான காற்றில் காயவிடலாம். பின் நறுமண பொடிகளால் தூபம் போட்டு காட்டி கொள்ள கூந்தல் மணக்கும். அதோடு தலைபாரம், சளி தொந்தரவுகள் ஏற்படாமல் தடுக்கும்.
1. இதற்கு வெட்டிவேர், லவங்கபத்திரி, அகருகட்டை, திருவட்டப்பச்சை தலா-1பங்கு, சாம்பிராணி -5பங்கு சந்தனத்தூள்-10பங்கு போன்ற அளவில் எடுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு குளித்ததும் தலைக்கு தூபமிட்டு காட்ட நல்ல மணமாக இருக்கும்.

2.அடுத்து சந்தனத்தூள் 100கிராம், ஜடாமஞ்சி, தேவதாரு, அகருகட்டை, கிரந்திதகரம், சாம்பிராணி -75தலா எடுத்துக் கொண்டு பொடியாக்கி குளித்ததும் கூந்தலுக்கு காட்ட கூந்தல் நறமணத்தில் இருக்கும்.
3.அடுத்து ரோஜாப்பூ - 500கிராம், திப்பிலி கிழங்கு, இலந்தை பழத்தோல், அகில் கட்டை, சாம்பிராணி, ஜடாமஞ்சி, லவங்கபத்திரி, பெரு லவங்கப்பட்டை, உலர்ந்த நார்த்தாம்பழத்தோல் -50கிராம் தலா எடுத்துக் கொண்டு எல்லாவற்றையும் பொடித்துக் கொண்டு கஸ்தூரி மஞ்சள் பொடித்து சேர்த்து இதனுடன் பன்னீர் சேர்த்து அரைத்து கலந்து காயவைக்கவும்.

இதை பத்திரப்படுத்திக்கொண்டு தலைக்கு குளித்ததும் கூந்தலுக்கு தூபம் போட்டு காட்டி கொள்ள கூந்தல் வியர்வை நாற்றம், பிசுபிசுப்பால் ஏற்படும் வாடை நீங்கி அருமையான மணத்தைக் கொடுத்து நல்ல தூக்கத்தை தரும். கூந்தலும் பட்டு போல காணப்படும்.
4. அடுத்து சந்தனத்தூள்-50கிராம், கிச்சிலிக்கிழங்கு -30கிராம், வெள்ளை குங்கிலியம் -20கிராம், சாம்பிராணி -30கிராம், லவங்கம், ஜாதிக்காய், மட்டிப்பால்-தலா-10கிராம் எடுத்து நன்றாக பொடி செய்து தலைக்கு தூபமிட வாசனை அருமையாக இருக்கும். இந்த இயற்கையான வாசனை நம்மை மற்றவர்களிடம் ஒரு தைரியமான பெண்ணாக காட்டும் மன உணர்வை ஏற்படுத்தும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |