Tamizha Tamizha: கண்முன் வீடியோ காலில் உயிரைவிட்ட காதல் மனைவி! அரங்கத்தில் கூறப்பட்ட உண்மை
தமிழா தமிழா நிகழ்ச்சியில் யார் வாழ்க்கை மிகவும் துயரமானது? கணவனை இழந்தவர்கள் மற்றும் மனைவியை இழந்தவர்கள் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.

இந்த வாரத்தில் யார் வாழ்க்கை மிகவும் துயரமானது? கணவனை இழந்தவர்கள் மற்றும் மனைவியை இழந்தவர்கள் என்ற தலைப்பில் பல உண்மையை அரங்கத்தில் கூறியுள்ளனர்.
இதில் காதலித்து திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்த கணவன் மனைவி எதிர்பாராத சூழ்நிலையில், ஒருவரையொருவர் பிரியும் நிலை ஏற்பட்டுள்ளது.
மனைவி வீட்டில் சற்று வசதியாக இருந்ததால், தன்னையும் அவர்கள் வீட்டில் வாழுமாறு அவரது பெற்றோர் கூறினார்கள். தனது அக்கா இருப்பதால் அவர்களை விட்டு வரமுடியாத நிலையில் நபர் இருந்துள்ளார்.
தாய் வீட்டிற்கு சென்ற மனைவியை அவர்களது பெற்றோர் தனது வீட்டிற்கு அனுப்பாமல் வைத்த நிலையில், மனைவி தன்னையும் தாய் வீட்டிற்கு அழைத்துள்ளார்.
சம்பவத்தன்று தன்னிடம் வீடியோ காலில் ஒரு மணி நேரம் பேசினார். மீண்டும் என்னை தொடர்பு கொண்டிருந்தார். அப்பொழுது ஏற்கனவே தயார் நிலையில் வைத்திருந்த தூக்கில் தனது கண்முன்னே உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறியுள்ளார்.
மனைவி இறந்து 6 வருடங்கள் ஆகிய நிலையில், தற்போதும் அவரது நினைவில் தான் வாழ்கின்றேன் என்றும் அவருக்கு செய்து வரும் செயல்களையும் அரங்கத்தில் கூறியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |