விலைக் கொடுத்து வாங்க வேண்டாம்... நரைமுடியை மறைக்கும் இயற்கையான ஹேர் கலர் வீட்டிலேயே செய்யலாம்
பொதுவாகவே பெண்களுக்கும், ஆண்களுக்கும் முடியை பராமரிப்பது என்பது மிகவும் விருப்பமானதொன்று தான்.
ஆனால் தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் சிறியவர்களுக்கும் நரைமுடி வந்து அழகையே சிதைத்து விடுகிறது.
நம் முன்னோர்கள் எல்லாம் அப்போது எந்த ஷாம்பும் பயன்படுத்தியது இல்லை, எந்த எண்ணெய்யும் பயன்படுத்தியது இயற்கை பொருட்களைக் கொண்டு இயற்கையாகவே அழகான முடியைக் கொண்டிருந்தார்கள்.
இப்படி நரைமுடியை மறைப்பதற்காக பலரும் கடைகளில் ஹேர் கலர்களை வாங்குவார்கள் அப்படியானவர்களுக்கு இனி கடையில் வாங்காமல் வீட்டிலேயே செய்யலாம்.
நரைமுடிப் பிரச்சினை இருப்பவர்கள் அதற்கான தீர்வைக் காண உடனடியாக பின்பற்றுவது கடைகளில் விற்கும் ஹேர் கலர்களைத் தான் தேடுவார்கள் அப்படி கடைகளில் வாங்காமல் வீட்டிலேயே தயார் செய்து பயன்படுத்தி பாருங்கள்.
தேவையான பொருட்கள்
- தண்ணீர்
- நெல்லிக்காய் தூள் - 1 தேக்கரண்டி
- மஞ்சள் தூள்- 1 தேக்கரண்டி
- இலவங்கப்பட்டை தூள் - 1 தேக்கரண்டி
- காபி தூள் - 1 தேக்கரண்டி
- பீட்ரூட் சாறு - 4 தேக்கரண்டி
- தேயிலை இலைகள்
- எலுமிச்சை சாறு
- மருதாணி
முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி நெல்லிக்காய் தூள், மஞ்சள் தூள், இலவங்கப்பட்டை தூள், காபி தூள், பீட்ரூட் சாறு, தேயிலை இலைகள் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
கொதித்து நன்றாக கெட்டியானதும் அதில் எலுமிச்சை சாறு கலந்து அடுப்பை அணைத்து விட வேண்டும். இந்தக் கலவை சூடு இல்லாமல் ஆறியதும் மருதாணி கலந்துக் கொள்ளவும்.
பாவனை முறை
நீங்கள் தயாரித்துக் கொண்ட இயற்கையான ஹேர் கலரை தலை முடிக்கு அப்ளை செய்துக் கொள்ளுங்கள். 1 மணிநேரம் கழித்து வெந்நீரில் கழுவினால் உங்கள் முடி கருமையாக மாறும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |