ஹேர் கலரிங் செய்பவர்கள் முடியை பாதிக்காம இருக்க இப்படி பயன்படுத்துங்க!
முடி நரைத்தால் பலரும் பலவிதமான முயற்சிகளை கையாண்டு தோல்வியாதிக்கு ஆளாகிறார்கள். முறையாக அதை செய்தால், எந்தவித பாதிப்பும் இருக்காது நரை முடி பிரச்சினையில் இருந்தும் விடுபடலாம்.
அப்படி ஹேர் கலரிங் செய்யும் போது அவை அலர்ஜி இல்லாமல் இருக்க வேண்டும். அதனால் அம்மோனியா ஃப்ரீ ஹேர் கலர் பார்த்து வாங்க வேண்டும். கூந்தலுக்கு பயன்படுத்துவதற்கு முன்பு ஒரு சிறு பேட்ச் பரிசோதனை செய்து பிறகே பயன்படுத்த வேண்டும்.
இதுதான் முதலில் கவனமாக இருக்க வேண்டிய விஷயம். ஹேர் கலரிங் செய்யும் போது நரைமுடி இருக்கும் இடத்தில் அந்த மயிர்க்கால்களில் மட்டும் போட வேண்டும்.
மற்ற இடங்களில் கொடுக்கும் போது கூந்தல் சேதமடையும். அதனால் வெள்ளை முடி தெரியும் இடத்தில் மட்டும் டச் செய்ய வேண்டும். உங்கள் முடி நன்றாக இருந்தால் மட்டுமே ஹேர் கலரிங் உதவும்.
முடியில் பிளவு இருந்தால் டேமேஜ் ஹேராக அதாவது சேதமடைந்த கூந்தலாக இருந்தால் நீங்கள் அதற்கு தனியாக பார்லரில் சென்று ஆயில் மசாஜ் அல்லது ஹேர் ஸ்பா சிகிச்சை எடுத்துகொண்ட பிறகு தான் ஹேர் கலர் செய்ய வேண்டும்.
மேலும், ஹேர் கலரிங் போடுவதற்கு முன்பு கூந்தலை நன்றாக அலசி சுத்தம் செய்த பிறகு பயன்படுத்த வேண்டும்.
அடுத்து, கூந்தலை அலசும் போது கண்டிஷனர் தவிர்க்க வேண்டும். கண்டிஷனர் பயன்படுத்தினால் ஹேர் கலரிங் முடி இழைகளுக்குள் ஊடுருவ முடியாது.