மருதாணியில் ஒளிந்திருக்கும் தனித்துவமான ரகசியம்- இவ்வளோ இருக்கா?
மருதாணியில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. உடல் சூட்டை தணிக்க இதன் இலை, பூ, விதை, பட்டை, வேர் என அனைத்தும் பயன்படுகிறது.
மேலும், வெள்ளிக்கிழமையில் மருதாணி இலையை பெண்கள் தங்களது கைகளில் வைத்துக் கொண்டால் மாங்கல்ய பலம் உண்டாகும் என்று கூறப்படுகிறது.
ஒருவர் மருதாணி கையில் வைக்கப்படும்போது, யார் மருதாணி வைத்தார்களோ அந்த நபர் மிகவும் பாசமானவர் என்பதை அறிந்துகொள்ளலாம்.
சரியான நிறத்துடன் மருதாணி சிவந்தவர்களுக்கு குழந்தை பிறப்பு சரியான முறையில் இருக்கும் என்று ஆயுர்வேதம் தெரிவிக்கிறது.
ஆரஞ்சு நிறமாக சிலருக்கு பிடிக்கும். சிலருக்கு அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும். சிலருக்கு கருத்தே போய்விடும் மருதாணி சிவக்காமல் மஞ்சள் நிறத்தில் இருந்தால் அது சீதள உடம்பை குறிப்பதாகும்.
அதிகம் கருத்திவிட்டால் பித்த உடம்பு. எனவே, இரண்டு நிலைகளிலும் கருத்தரிக்க தாமதம் ஆகும் என்று கூறப்படுகிறது.
மருதாணி ஒரு நல்ல கிருமி நாசினி. கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது. இதனால் நகங்களுக்கு எந்த நோயும் வராமல் பாதுகாக்கப்படும்.
மருதாணியின் பூக்களை பறித்து தலையணைகளில் நிரப்பி உபயோகித்தால் நல்ல தூக்கம் வரும்.