முடி வேகமாக வளர தயிரோடு இந்த ஒரு பொருளை சேர்த்து யூஸ் பண்ணுங்க... மின்னல் வேக பலன் கிடைக்கும்!
முடி உதிர்தல் போன்ற முக்கியமான தலைமுடி பிரச்சினைகளை சரிசெய்ய தயிர் உதவுகிறது.
தயிரில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.
வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் வளமான மூலமாகும். தயிர் உங்கள் தலைமுடி பிரச்சனைகளை எதிர்த்துப் போராடுகிறது.
தொடையழகைக் காட்டி லொஸ்லியா வெளியிட்ட புகைப்படம்! வாயடைத்துப் போன ரசிகர்கள்
இன்று முடி வளர்ச்சிக்கு தயிரை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
முடி வளர்ச்சி
நெல்லிக்காய் தூள் முடியின் வேர்களை வலுப்படுத்தவும், முடி வளர்ச்சியை மேம்படுத்தவும் அறியப்படுகிறது.
புரதச்சத்து நிறைந்த தயிருடன் இதை கலந்து பயன்படுத்துவதால், நிச்சயமாக உங்கள் முடி வளர்ச்சியில் ஊக்கத்தை காண்பீர்கள்.
என்ன செய்ய வேண்டும்?
1 டீஸ்பூன் தயிர், 1 டீஸ்பூன் நெல்லிக்காய் தூள் இரண்டையும் ஒரு கிண்ணத்தில் ஒன்றாக கலக்கவும்.
கலவையை உங்கள் உச்சந்தலையிலும் முடியிலும் தடவவும்.
சுமார் அரை மணி நேரம் அப்படியே விடவும்.
பின்னர் உங்கள் தலைமுடியை ஷாம்பு போட்டு அலசவும்.
உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்
இது தவிர முடி வளர்ச்சிக்கு தயிரை தினமும் உணவின் ஒரு அங்கமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் பல நன்மைகளைப் பெறலாம்.
அவை என்னென்ன பார்க்கலாம்.
- தயிரில் விட்டமின் B-12 , கால்சியம் , பாஸ்பரஸ் , மெக்னீசியம் மற்றும் மினரல்கள் உள்ளன. இவை உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துகளாகும்.
- தயிரில் நிறைவாக உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவும்.
- மூட்டு வலி, எலும்பு தேய்மானம் போன்ற பிரச்னை இருப்போர் தினமும் ஒரு பவுல் தயிர் சாப்பிடலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
- தயிர் மன அழுத்தம், சோர்வை உண்டாக்கும் கார்டிசோல் என்னும் ஹார்மோன் சுரத்தலை கட்டுப்படுத்துவதால் மன அழுத்தம், எதிர்மறை சிந்தனைகள் வராது.
- தயிரில் இயற்கையான முறையில் ப்ரோபயோடிக்ஸ் என்னும் அமிலம் உள்ளது.
- இது தயிரில் வாழும் பாக்டீரியாக்களினால் சுரப்பதால் குடலுக்கு நல்லது.
- இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிகும். குடல் ஆரோக்கியமா இருந்தாலே 70% நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துவிடும்.
- குடல் ஆரோக்கியமாக இருந்தாலே ஜீரண சக்தியும் வேகமாக செயல்படும்.
- தயிரில் புரோட்டீன் அதிகம் உள்ளதால் தோல் மற்றும் தசைகள் இறுக்கமாகவும் தயிர் உதவும்.