ஹீரோயின் போல் மின்னனுமா? இந்த உணவுகளே போதும்!
பொதுவாக அனைவருக்குமே தான் அழகாக இருக்கவேண்டும் என்பதே ஆசை.
அதற்காக பலவிதமான க்ரீம்கள், ஃபேஸ் பெக்குகள் என்பவற்றை உபயோகிக்கிறோம்.
என்னதான் முகத்துக்கு இவற்றை உபயோகப்படுத்தினாலும் நாம் உண்ணும் உணவும் நமது முக அழகில் பங்களிப்பு செலுத்துகின்றது.
தக்காளி
சரும அழகை மேம்படுத்துவதில் தக்காளிக்கு பெரும் பங்குண்டு. தக்காளியில் விட்டமின்கள், லைகோபீன் போன்றவை காணப்படுவதால் சருமத்துக்கு தீங்கு விளைவிக்கும் கதிர்களிலிருந்து பாதுகாக்கிறது. சருமத்தில் உள்ள சுருக்கங்களை எளிதில் நீக்கி சருமத்தை சீராக்கும்.
அவகாடோ
இதில் இரும்புச்சத்து, விட்டமின் சி, நார்ச்சத்து போன்றவை இருப்பதால் சருமம் மென்மையாக மாறும். அதுமாத்திரமின்றி சருமம் பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் மாறும். மந்தமான சருமத்தை சரிசெய்யும். ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் மாற்றும்.
ப்ரொக்கோலி
இதில் விட்டமின் சி, நார்ச்சத்து, இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இது சூரிய ஒளியிலிருந்து சருமத்தை பாதுகாக்க உதவுகிறது. முகத்தை பளபளப்பாக ஜொலிக்க வைப்பதில் பங்காற்றுகிறது.
வால்நட்
இதில் பொட்டாசியம், இரும்பு, புரதம் போன்ற சத்துக்கள் உள்ளன.
இயற்கையான அழகைப் பெற வால்நட் சிறந்த தெரிவு.