வெறும் 7 நாட்களில் தொடை கருமை நீங்க! அசத்தலான வீட்டு வைத்தியம்
முக அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாம், உடல் பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
அக்குள், கழுத்து மற்றும் தொடையின் உள்பகுதிகளில் கருமை காணப்படும், அதுவும் உடல்பருமனான நபர்கள் என்றால் சதை அதிகம் உள்ள இடங்களிலும் கருமை காணப்படும்.
இதை கவனிக்காமல் அப்படியே விட்டுவிட்டால், நாளடைவில் சொரசொரப்பாகி அரிப்பு போன்ற இன்னும் பிற தொந்தரவுகளையும் கொடுக்கலாம்.
இதற்காக எத்தனையோ க்ரீம்களை பயன்படுத்தினாலும் அதனால் தற்காலிக தீர்வு கிடைக்குமே தவிர சரியாகாது, க்ரீம்கள் பயன்படுத்தாத நேரங்களில் கருமை மீண்டும் வரலாம்.
எனவே இந்த பதிவில் வீட்டு வைத்தியத்தின் மூலம் அதனை சரிசெய்வது குறித்து தெரிந்து கொள்வோம்.
கருமை நீங்க
* தேங்காய் எண்ணெயுடன், சம அளவு எலுமிச்சை பழச்சாறும், சிறிதளவு வைட்டமின் ஈ எண்ணெயும் கலந்து கொண்டு கருமை உள்ள இடத்தில் தடவி வரலாம்.
* ஓட்ஸை பொடித்துவைத்துக் கொண்டு, அதனுடன் சிறிதளவு தயிர், ஒரு சிட்டிகை அளவு பேக்கிங் சோடா கலந்து கொள்ளவும், இதனுடன் கற்றாழை ஜெல்லை சேர்ந்து நன்றாக கலக்கிய பின்னர் கருமையுள்ள இடத்தில் தடவவும், இதனை சுமார் 10 நிமிடங்களுக்கு அப்படியே ஸ்க்ரப் செய்த பின்னர் குளிர்ந்த நீரில் கழுவி விடலாம்.
* 2 டீஸ்பூன் எலுமிச்சைபழச்சாறுடன், சிறிதளவு சர்க்கரை மற்றும் தேன் கலந்து கொள்ள வேண்டும், இந்த கலவையை கருமையுள்ள இடங்களில் லேசாக தடவி தேய்த்துக் கழுவினால் பலன் தெரியும், தொடர்ந்து இதனை செய்து வரும் போது ஏழு நாட்களில் கருமை நீங்கும்.
* தோல் பிரச்சனைகளுக்கு கற்றாழை சிறந்த தீர்வாகிறது, முகப்பரு, முகத்தில் அழுக்குகளை நீக்கவும் பயன்படும் கற்றாழை ஜெல்லை கருமையுள்ள இடங்களில் தேய்த்து விட்டு சுமார் 10 நிமிடங்கள் கழித்து கழுவினால் கருமை நீங்கும்.
* உருளைக்கிழங்கு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிவிட்டு, மிக்ஸி ஜாரில் அரைத்து சாறு எடுத்துக்கொள்ளுங்கள், தண்ணீர் அதிகளவு சேர்க்க வேண்டாம், பின்னர் இந்த சாறை சுத்தமான காட்டன் துணியின் நனைத்து கருமை உள்ள இடத்தில் தேய்த்து வரவும், அரைமணிநேரம் கழித்து குளிர்ச்சியான நீரில் கழுவிவரவும். தொடர்ந்து இதை செய்து வந்தால் வெகு சீக்கிரமாகவே பலன் தெரிந்துவிடும்.