நா ஓ கூட தான் இருப்பேன்.. மீண்டும் சண்டையை ஆரம்பித்த ஸ்ரீநிதி - கர்ப்பத்துடன் வெளியான வீடியோ
நடுரோட்டில் ரீல்ஸ் செய்து சண்டையிடும் பிரபலங்களின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சின்னத்திரை பிரபலங்கள்
பொதுவாக சீரியல்களில் நடிக்கும் நடிகைகள் ஒருத்தரை ஒருவர் நன்றாக புரிந்தவர்களாக தான் இருப்பார்கள்.
இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் இவர்கள் நீண்ட நாட்கள் ஒன்றாக நடித்து வருவதால் இவர்களின் நட்பு நாளுக்கு நாள் வளர ஆரம்பிக்கிறது.
அந்த வகையில் “யாரடி மோகினி” சீரியலில் இணைந்து நடிப்பதால் நண்பர்களாக சுற்றி திரிந்தவர்கள் தான் நடிகை நட்சத்திரா மற்றும் ஸ்ரீநிதி.
சின்னத்திரையில் இருக்கும் போது நண்பர்களாக இருந்த இருவரும் நட்சத்திராவின் திருமணத்தின் போது இருவருக்கும் இடையில் பலத்த சண்டை நிகழ்ந்தது.
இதனை தொடர்ந்து ஸ்ரீநிதி நடிகர் சிம்புவை காதலிப்பதாகவும், அவர் வீட்டின் முன் நின்று போராட்டம் செய்வதாகவும் பல சர்ச்சைகளை ஏற்படுத்திருந்தார்.
பழைய தோழியுடன் மீண்டும் ரில்ஸ்
இந்த நிலையில் தற்போத நடிகை நட்சத்திரா திருமணம் முடித்து கர்ப்பமாக இருக்கிறார். இந்த விடயத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததிலிருந்து அவருடைய பழைய சீரியல்கள் நடிகைகள் எல்லாம் மீண்டும் ஒன்று சேர ஆரம்பித்துள்ளார்கள்.
இவர்கள் செய்யும் சேட்டைகளை புகைப்படங்களாவும், வீடியோக்களாவும் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
அந்த வகையில், நடிகை நட்சத்திரா மற்றும் ஸ்ரீநிதி இருவரும் ஒன்றாக மீண்டும் சேர்ந்த நிலையில், சண்டையிடுவது போன்று இருவரும் ரீல்ஸ் செய்து வெளியிட்டுள்ளார்கள்.
இதனை பார்த்த இணையவாசிகள்,“நீங்க மீண்டும் சேர்ந்தீட்டிங்களா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.