பிரபல நடிகை வெளியிட்ட காணொளி... என்னடி இது? சரமாரியாக கேள்வி எழுப்பிய ரசிகர்கள்
வெண்ணிலவாக நடித்து மக்களிடையே பெரும் வரவேற்பினை பெற்ற நட்சத்திரா குட்டிசேரி, கையில் பாம்புடன் விளையாடிய காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.
கேரளாவில் பிறந்து வளர்ந்த இவர், தமிழில் நடிப்பதற்கு முன்பே மலையாளத்தில் இரண்டு படங்கள் நடித்துள்ளார். பின்பு சினிமாவில் சிறந்த வாய்ப்புகளை தேடி சென்னைக்கு ந்த இவர் ‘கிடா பூசாரி மகுடி’ என்ற படத்தில் அறிமுகமானார்.
அந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ராம்தேவ் என்பவர் நடித்திருந்தார். அதன் பின்னர் சினிமாவில் சரிவர வாய்ப்பு அமையாததால் சீரியல் பக்கம் கவனத்தை செலுத்தினார் நட்சத்திரா.
தற்போது யாரடி நீ மோகினி சீரியலில் மிகவும் சாதுவாக வலம்வரும் இவர் உண்மையாகவே பயங்கர வாயடி மட்டுமில்லாமல் துறுதுறு என்று இருப்பாராம்.
இந்நிலையில் தற்போது கையில் பாம்பு ஒன்றினை வைத்துக்கொண்டு விளையாடிய காணொளியினை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனை அவதானித்த ரசிகர், என்னடி உடை இது? பாம்புக்கும், உனக்கும் ஒரே மாதிரியாக இருக்குது... எந்த கடையில காசு கொடுத்து வாங்குனீங்க? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.