திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக்
பிக்பாஸ் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி அதில் திட்டுபவருக்கும் காசு... திட்டு வாங்குபவருக்கும் காசு.. இது தெரியாமல் மக்கள் பாரு மற்றும் கமூருதீன் சாண்ட்ராவையை காரில் இருந்து தள்ளியது குறித்து கொந்தளித்து வருகின்றார்கள்.
என பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பல உண்மைகளை வெளிப்படையாக பேசி விஜய் தொலைக்காட்சி பிரபலம் நாஞ்சில் விஜயன் தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் படுவைரலாகி வருகின்றது.

நாஞ்சில் விஜயன்
நாகர்கோவிலைச் சேர்ந்த நாஞ்சில் விஜயன் விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்களிடம் புகழ் பெற்றார்.
குறிப்பாக அது இது எது, கலக்கப்போவது யாரு ஆகிய நிகழ்ச்சிகளில் தனது காமெடியான உடல்மொழியால் பலரை சிரிக்க வைத்தவர்.

நாஞ்சில் விஜயன் மரியா என்ற பெண்ணை கடந்த கடந்த 2023 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். திருமணமாகி 2 இரண்டு ஆண்டுகளின் பின்னர் இந்த தம்பதியினருக்கு அண்மையில் தான் குழந்தை பிறந்தது.

அண்மையில் திருநங்கையை ஏமாற்றியதாக சர்ச்சையில் சிக்கியதால் நாஞ்சில் விஜயன் பற்றிய விடயங்கள் இணையத்தில் பேசு பொருளாக மாறியதும் அனைவரும் அறிந்ததே.

விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றி வரும் இவரே தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த பல உண்மைகளை வெளிப்படையாக தெரிவித்து வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |