கணவரிடம் தவறியும் சொல்லவே கூடாத 4 விடயங்கள்! மீறினால் பிரிவு உறுதி
பொதுவாக பெண்களுக்கு எத்தனை உறவுகள் இருந்தாலும் திருமணத்திற்கு பின்னரான வாழ்க்கையில் கணவர் தான் எல்லாமே என்ற எண்ணம் வந்துவிடும்.
ஆனால் அதனை பல ஆண்கள் உணர்வதில்லை, காதலித்து திருமணம் செய்துக்கொண்டவர்கள் கூட திருமணத்திற்கு பின்னர் மனைவியை பற்றி குறைகூற ஆரம்பித்துவிடுகின்றனர்.

உண்மையில் கணவன் மனைவி உறவில் எந்தளவுக்கு சண்டை வருகின்றதோ, அந்தளவுக்கு அவர்களுக்கு இடையிலாக நெருக்கமும் புரிந்துணர்வும் அதிகரிக்கின்றது.
ஆனால் சண்டைகளின் போதும் கூட கணவனின் சொல்லவே கூடாத சில விடயங்கள் இருக்கின்றன. இது குறித்து பெண்கள் பலரும் அறிந்திருப்பதில்லை.

அப்படி உளவியல் நிபுணர்களின் கருத்துப்படி ஆண்களிடம் சொல்லவே கூடாத சில விடயங்கள் தொடர்பில் இந்த பதிவில் விரிவாக அறிந்துக்கொள்ளலாம்.
தவிர்க்க வேண்டியவை

1.ஒப்பீடு செய்வது: பொதுவாக ஆண்களுக்கு தங்களின் மனைவி அல்லது காதலி தன்னை யாருடனும் ஒப்பிட்டு பேசுவதை ஒருபோதும் விரும்புவது கிடையாது.
என உளவியல் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இந்த தவறை எவ்வளவு கோபம் இருந்தாலும் செய்யவே கூடாது.
காணரம் இது சண்டைகள் முடிவுக்கு வந்தபின்னரும் கூட ஆண்கள் மனதில் மாறாத வடுவாக மாறிவிடுமாம்.

2.குடும்பத்தை பற்றி பேசுதல்: உங்கள் கணவரிடம் அவரது குடும்பத்தை பற்றி ஒருபோதும் தரக்குறைவாக பேசவே கூடாது .
ஆரம்பத்தில் உங்கள் மீதான காதலில் ஆண்கள் அதனை பொறுத்துக்கொண்டாவும் ஒரு கட்டத்துக்கு மேல் நிச்சயம் தாங்கிக்கொள்ள மாட்டார்கள்.
உங்கள் மாமியாரின் வளர்ப்பு பற்றி நகைச்சுவையாக பேசுவது கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் தூரத்தை அதிகரிக்கும் உளவியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

3அங்கீகாரம் கொடுக்காமல் இருப்பது: உங்களுக்கென தனிப்பட்ட நேரம் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புவது போல, ஆண்களும் தங்கள் தனிப்பட்ட இடம் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
எனவே அந்த நேரத்தில் அவரை தொந்தரவு செய்யாமல் இருப்பது நல்லது. பல சமயங்களில் மனைவிகள் தங்கள் கணவர் செய்யும் விஷயங்களுக்கு அங்கீகாரம் கொடுக்காமல் புறக்கணிப்பது உங்களின் மீது கணவருக்கு வெறுப்பையே ஏற்படுத்தும். இந்த தவறை ஒருபோதும் செய்யாதீர்கள்.

4.தவறுகளை சுட்டிக்காட்டுதல்: உங்கள் கணவரின் தவறுகளை மற்றவர் முன்னிலையில் கண்டறிவது அவரை வலுவாக பாதிக்கின்றது.
இந்த விடயம் ஆண்களை விவாகரத்து வரை கூட சிந்திக்க தூண்டும். பெண்கள் இந்த விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என உளவியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆண்களுக்கு தங்களின் தவறுகளை மனைவி சுட்டிக்காட்டுவது பிடிக்கும்.ஆனால் நிச்சயம் மற்றவர் முன்னிலையில் அவமானப்படுவதை விரும்பவே மாட்டார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |