சிசியூ-வில் பாரதிராஜா இப்போது எப்படி இருக்கிறார்? மருத்துவமனை வெளியிட்ட அடுத்த அறிக்கை
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பாரதிராஜாவின் உடல்நிலை தற்போது எவ்வாறு உள்ளது என்ற அறிக்கையை மருத்துவமனை வெளியிட்டுள்ளது.
பாரதிராஜா
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம்வரும் பாரதிராஜா, நேற்றைய தினம் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவரைக் குறித்து பல வதந்திகளும் பரவி வருகின்றது.

இதற்கு அவரது மகள் ஏற்கனவே மருத்துவ அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது உடல்நிலை குறித்து மற்றொரு அறிக்கை வெளியாகியுள்ளது.
ஐசியூ-வில் இருந்த பாரதிராஜா தற்போது சிசியூ-விற்கு கொண்டு வந்துள்ளதாகவும், தீவிர நுரையீரல் தொற்று இருக்கின்றது... ஆனால் இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் சரியாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.


ஆனால் பாரதிராஜாவின் நிலையை அறிந்த திரைப்பிரபலங்கள், மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர். ஆனாலும் அவரை பார்ப்பதற்கு யாருக்கும் அனுமதியில்லை என கூறப்படுகின்றது.
பாரதிராஜாவின் படம் என்றாலே கிராமத்து கதைக்களம், இயல்பான மனித உணர்வு, புது முகங்களுக்கு வாய்ப்பு என்று நம் அனைவருக்கும் தெரிந்ததே...

மகன் இறப்பிற்கு பின்பு வெளி நிகழ்ச்சிகளில் அதிகமாக கலந்து கொள்ளாமல் இருந்த பாரதிராஜா, சில முக்கிய நிகழ்வுகளில் மட்டுமே கலந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |