தீவிர சிகிச்சையில் இயக்குநர் பாரதிராஜா! மகள் விடுத்துள்ள வேண்டுகோள்
இயக்குநர் பாரதிராஜா தொடர்பாக இணையத்தில் பரவரும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் பாரதிராஜா நலமுடன் இருப்பதாகவும், அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் பாரதிராஜா
தமிழ் சினிமாவின் மூத்த மற்றும் புகழ்பெற்ற இயக்குநரான பாரதிராஜா, உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது தற்போதைய உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது.
பாரதிராஜா மூச்சுத்திணறல் காரணமாகவே நேற்றைய தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இத்தகைய சூழலில் அவரது உடல்நிலை குறித்து வெளிவரும் பல்வேறு வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பாரதிராஜாவின் மகள் ஜனனி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாரதிராஜா அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகம் தரப்பிலும் ‘அவர் நலமுடன் உள்ளார்’ என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் பாரதிராஜா அவர்கள் நலமுடன் தான் உள்ளார். #Bharathiraja pic.twitter.com/Txpw5pEW9s
— Harish M (@chnmharish) January 3, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |