தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவருக்கு மட்டுமே தெரியும்..நாக சைதன்யா பளீச்!
தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் விடயங்கள் குறித்து நாக சைதன்யா பேசிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
திருமண வாழ்க்கை
தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தான் நாக சைதன்யா.
இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து சமந்தா நோய்வாய்ப்பட்டிருந்த போது நாக சைதன்யா நேரில் வந்து பார்த்ததாகவும் மீண்டும் இருவரும் சேர போவதாகவும் சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வைரலானது.
ஓபன் டாக்
இவை அனைத்திற்கு முற்றிப்புள்ளி வைக்கும் விதமாக பேட்டியொன்றில் நாக சைதன்யா பதிலடிக் கொடுத்துள்ளார்.
அதில், “ என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை விட சினிமாவில் தான் அதிகம் கவனம் செலுத்துகிறார். மேலும் சமூக வலைத்தளங்களில் வரும் வதந்திகள் பொருட்டாக இல்லை..” என ஓபனாக பேசியுள்ளார்.
நாக சைதன்யா ஒருவழியாக வாயை திறந்து விட்டார் என ரசிகர்கள் ஒரு பக்கம் குஷியில் இருக்கிறார்கள்.
ஆனால் விவாகரத்திற்கான காரணம் இன்னும் தெளிவுப்படுத்தாத நிலையில் இது குறித்தான தேடல்கள் அதிகமாக இருந்து வருகின்றது.
இந்த செய்தி கேட்ட சமந்தா ரசிகர்கள், “அப்போ இருவரும் சேர மாட்டீர்களா?” என கேள்வியெழுப்பி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |