குரு, சுக்கிரனால் ராஜயோகம்: அதிஷ்டம் அளிக்க போகும் ராசிக்காரர்கள்! இதில் உங்க ராசி இருக்கா?
பொதுவாக ராசிப்பலன்கள் கிரகங்களின் மாற்றங்களை அடிப்படையாக கொண்டு கணிக்கப்படுகின்றது.
இந்த வருடத்தில் இறுதி மாதமான டிசம்பர் மாதத்தில் இருக்கின்றோம்.
அடுத்த வருடம் எப்படி இருக்க போகின்றது என்பதனை தெரிந்து கொள்ள மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதன்படி, சுக்கிரன் துலாம் ராசியில் பயணித்து வருகிறார்.
இதனால் இந்த மாதத்தில் குறிப்பிட்ட சில ராசிகளின் வாழ்க்கையில் பாரியளவு மாற்றங்கள் ஏற்படவுள்ளது. அதே வேளையில் குரு பகவான் மேஷ ராசியில் பயணித்து வருகிறார்.
இதன் காரணமாக சமசப்தம யோகம் உருவாகிறது. இந்நிலையில் குரு மற்றும் சுக்கிரனால் காம என்ற யோகம் உருவாகிறது. இப்படி ஏகப்பட்ட மாற்றங்கள் டிசம்பர் மாதத்தில் ஏற்படுகின்றது.
அந்த வகையில் இந்த மாதம் அதிஷ்டம் பெறப்போகும் குறிப்பிட்ட ராசிக்காரர்கள் பற்றி தெளிவாக பார்க்கலாம்.
1. மேஷம்
இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு காம யோகமானது நல்ல பலனைத் தரும். இவர்களின் வாழ்க்கையில் இருக்கும் துயரங்கள் இது போன்ற சேர்க்கைகளால் இல்லாமல் போகும்.
திருமணம், வேலை இவை இரண்டையும் எதிர்பார்த்து இருப்பவர்களின் வாழ்க்கையில் அடுத்த வருடம் சிறந்த மாற்றத்தை பார்க்கலாம். குடும்பத்துடன் அதிகமான நேரத்தை செலவிடுங்கள்.
2. கடகம்
காம யோகத்தால் இந்த ராசிக்காரர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். புதிய வீடு, வாகனம், சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். யோகத்தால் இவர்களின் குடும்ப வாழ்க்கையும் மகிழ்ச்சியாக மாறும்.
பெற்றோர்களின் ஆசீர்வாதம் முற்றாக நீங்கள் பெறுவீர்கள்.முக்கியமாக நீண்ட நாள் ஆசைகள் இந்த யோக காலத்தில் நிறைவேறும். இப்படி ஏகப்பட்ட நன்மைகள் கடக ராசி அன்பர்களுக்கு கிடைக்கும்.
3. சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் காம யோகமானது நல்ல வெற்றிகளை பெற வைக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இதனால் வீட்டிலுள்ள கடன் சுமைகள் குறையும்.
குழந்தை, மனைவி என மகிழ்ச்சியான தருணங்கள் அதிகமாக இருக்கும். நீங்கள் நீண்ட நாட்களாக ஏங்கிய ஒரு வாழ்க்கை உங்களுக்கு நிச்சயமாக கிடைக்கும் இது போன்ற சேர்க்கையால் வாழ்வில் நல்ல மாற்றத்தை காணும் ராசிகளில் நீங்கள் தான் முதல் இடத்தை பெறுவீர்கள்.
முக்கிய குறிப்பு
இது ஒரு ஜோதிட குறிப்பு மாத்திரமே.. மேலதிக விளக்கங்களை குடும்ப ஜோதிடரிடம் கேட்கலாம்.