மழைக்காலத்தில் சுற்றுலா போக ஏற்ற இடங்கள்.. ஜில்லுனு வைப் கொடுக்கும்
வருடம் முழுவதும் வேலைப் பார்த்து விட்டு, விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் எங்காவது போக வேண்டும் தோன்றினால் மலைகள் சூழ்ந்த இடங்களை தெரிவு செய்யலாம்.
இந்தியாவின் “ஸ்காட்லாந்து” என அழைக்கப்படும் கூர்க் கர்நாடகாவில் கொடகு மாவட்டத்தில் உள்ள ஒரு இயற்கை அழகு மிக்க குளிர் பிரதேசம் உள்ளது.
இங்கு ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரை மான்சூன் மழைக்காலத்தில் சுற்றுலா செல்வது ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும் தமிழ்நாட்டில் எந்த ஊரில் இருந்தாலும் ட்ரெயின் அல்லது பஸில் ஏறி மைசூர் வந்து பாருங்கள்.
அங்கிருந்து மடிக்கேரி (கூர்க்) செல்ல பல பஸ்களும் ஜீப்கள் உள்ளன. அதில் ஏறி, பச்சைப் பசேலென்ற மலைகள், பனித்துளிகள் நிறைந்த காற்று, அருவிகள் மற்றும் காபி தோட்டங்கள் அனைத்தையும் கண்டு மகிழலாம். புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் எடுப்பதற்கு சிறந்த இடங்களாகவும் இருக்கும்.
அந்த வகையில், மழைக்காலத்தில் கூர்க் சுற்றுலா சென்றால் என்ன மாதிரியான அனுபவங்கள் மற்றும் இடங்களை காணலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.
அபே அருவி | மழைக்காலத்தில் விடுமுறைக்கு வெளியில் செல்பவர்கள் அபே அருவிக்கு செல்லலாம். இங்கு பிரமிக்க வைக்கும் காட்சிகள் அதிகமாக உள்ளன. பசுமையான காடுகள் மற்றும் மழை நீர் அதிகமாக இருக்கும். அங்குள்ள அருவியின் ஒலி மற்றும் தோற்றம் கவர்ச்சிகரமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் அதிகமாக செல்கிறார்கள். அருவியில் குளிக்க முடியாது. ஆனால் அங்கு நின்று இயற்கை ரசிக்கலாம். புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் எடுத்து கொள்ளவும் இலவாக இருக்கும். |
தலைக்காவேரி | காவேரி நதி பிறந்த புனித இடம் தலைக்காவேரி பார்க்கப்படுகிறது. இங்கு மழைக்காலங்களில் பிரம்மகுண்டம் நீரால் நிரம்பி வழியும். விடுமுறை நாட்களை ஆன்மீகமாக கழிக்க நினைப்பவர்கள் மழையின் சாரல் மற்றும் குளிர்ந்த காற்றை பார்க்கலாம். இங்கு வருபவர்களுக்கு மாடர்ன் ஆடைகள் தடைச் செய்யப்பட்டுள்ளது. |
ராஜா சீட் | கூர்கில் ராஜா சீட் ஒரு பிரபலமான இடமாக இருப்பதால் மழைக்காலங்கிளல் புல்வெளி பார்ப்பதற்கு பச்சை பசேல் என இருக்கும். மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளின் தோற்றமும் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். |
நிசர்கதாமா | நிசர்கதாமா காவேரி நதி ஒரு தீவு போன்று காணப்படும். கொடகு மாவட்டத்தில் குஷால் நகர் என்ற பகுதியில் தான் இந்த இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் மழைக்காலத்தில் மேகங்கள் தரையைத் தொடும் அழகை பார்க்கலாம். அத்துடன் இங்கு சென்று நடக்கும் பொழுது மேகங்கள் நடுவில் நடப்பது போன்று இருக்கும். சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் பார்ப்பதற்கு அழகாக இருக்கும் |
மண்டல்பட்டி வியூ பாயின்ட் | மண்டல்பட்டி ஒரு இயற்கை சுற்றுலா ஈர்ப்பு மையமாக பார்க்கப்படுகிறது. மடிக்கேரியில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் இந்த இடத்தில் இயற்கை ஆர்வலர்கள் இருப்பார்கள். மண்டல்பட்டி என்றால் மேகங்கள் நடுவில் இருக்கும் தலை என பொருளாகும். இந்த மலைக்கு செல்ல ஜீப் சபாரி செய்யலாம். சூரிய கதிர்களின் வண்ணங்களை வானில் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும். புதிதாக திருமணமான தம்பதிகள் இங்கு செல்வார்கள். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |